பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இந்தக் கேள்விதான் திரும்பத்திரும்ப என் செவிகளில் மோதி, அம்பாகத் துளைத்தது, இதயத்தை சிதறடித்தது.

கேள்வியைக் கேட்ட பேராசிரியருக்கோ கேள்வி சாதாரணம் தான், ஆனால், கேட்டிருந்த எனக்கோ, கேவலமாக இருந்தது. அந்தக் கேள்வியை அப்படித்தான் நான் எடுத்துக்கொண்டேன்.

கவிதை எழுதுவதற்கு என்ன தகுதி வேண்டும் ? பொருளாதாரப் பட்டப்படிப்பு போதாதா? உடற்கல்வித் துறையில் ஒரு பட்டப்படிப்பு போதாதா? உணர்வு போதாதா? சொல்லாற்றல் போதாதா? அதற்கும் மேலே ஒரு தகுதி இருக்கிறதா?

தமிழ் படித்தவர்கள், அப்படித்தான் பேசுகின்றார்கள். கவிதைக்கும் தமிழிலக்கணத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து, குழம்பினேன். என்னையே குழப்பிக் கொண்டேன்.

எனது கவிதைக்கு, தமிழ் படித்தவர்கள் மத்தியிலே, மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், நானும் தமிழில் பட்டம் ஒன்றைப் பெற வேண்டும் பெற்றாக வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது.

பேராசிரியர் அறையிலிருந்து, உடற்கல்வித் துறைக்கு நான் வரும் வரை, மிகவும் மெளனமாக நடந்து வந்தது. திரு டாட் அவர்களுக்கு, ஆச்சர்யமாக இருந்தது.

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் எனக்கு, இந்த சாதாரண கேள்வியை ஜீரணிக்கவே முடியவில்லை. இதற்கு ஒரு வழி கண்டாக வேண்டுமே? எப்படி என்றுதான் எனக்குப் புரியாமல் இருந்தது.

தமிழில் எம். ஏ. பட்டம் பெற வேண்டும். இதை நான்