பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பிறகு, கவிதை, சிறுகதை என்று தொடர்கிறேன் என்றேன்.

குழந்தைநாதன் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. எனது இலட்சிய வேகம் அவரது சொல்லில் பிறந்து வந்தது.

கதை, கவிதை, நாடகம் எல்லாம், கண்டவர்கள் எழுதுகிற துறையாயிற்றே! உங்களுக்கு என்று ஒரு துறை இருக்கிறதே விளையாட்டுத்துறை அதில் எழுதலாமே எனறாா.

தமிழ் நெஞ்சம் ஒன்று, தமிழ்த்துறையை விட்டு, வேறு துறை பற்றி சிந்தித்து செப்பியமொழி, என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

விளையாட்டு பற்றி எழுதவேண்டுமா? வியப்பில் விரிந்து போனேன். எனது விழிகள் வியப்பில் பெரிதாகி, மலைப்பில் சுருங்கிக் கொண்டன.

நாளையிலிருந்தே இந்தப் பணியைத் தொடங்குங்களேன் என்று, செல்லமான கட்டளை ஒன்றைப் பிறப்பித்து விட்டு என்னை அனுப்பி வைத்தார். அவரும் ஒரு என்.சி.சி ஆபிசர் அல்லவா நேரம் பறந்தது, கட்டளை ஒன்றைக் கொடுத்து, விளையாட்டு இலக்கியம் என்னும் விதை ஒன்றை, என் நெஞ்சுக்குள் விதைத்து விட்டார்.

தமிழில் முதுகலைப் பட்டம் பெறவேண்டும் என்ற வேகம் கல்லூரி ஆசிரியர் என்றால் நிறைய படித்து தகுதியுள்ளவராக விளங்கவேண்டும் என்ற தனியாத தாகம். விளையாட்டுத் துறையில் புதிதாக நூல்களை எழுத வேண்டும் என்று துண்டும் விவேகம்.

இந்த மும்முனைத் தாக்குதல் என்னை பாடாய் படுத்தி, விரட்டோ விரட்டு என்று விரட்டியது. நானும் விரட்டலுக்குப் பயந்து, புதிய இடம் ஒன்றில் போய் புகுந்து கொண்டேன்.