பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எறியும், அளவுக்கு முற்றிவிட்டது.

‘இது என்ன படிப்பு என்று என் மனைவி கேட்ட கேள்வியும் சரிதான். நான் என்ன புத்தகம் படிக்கிறேன் என்பது எனக்கு தெரியாமலேயே படித்தேன். -

எந்தத் தலைப்பு எனக்குப் பிடிக்கின்றதோ அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொள்வேன். புத்தகம் எத்தனைப் பெரிதாக இருந்தாலும், அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. பயமும் இல்லை. புத்தகத்தை முடிக்கும் வரை ஒரே சிந்தனை தான். அதே சிந்தனை தான்.

‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்பது ஒரு பழமொழி.

கண்டதை யெல்லாம் எடுத்துப் படித்தால் பண்டிதன் ஆகிவிடலாம் என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். முயற்சிகளை முடுக்கி விடுகின்றனர்.

நல்ல நூல்கள் என்று கண்டு, நல் சுவை பயக்கும் எனக் கொண்டு அதைக் கற்க, பெரும் புலமையுடையவர் ஆகலாம் என்பது தான் உண்மைப் பொருளாகும்.

நானோ, பலதுறை நூல்களைக் கற்க ஆரம்பித்தேன். படிக்கின்ற உணர்வோ விருப்பமோ இல்லாவிட்டாலும் கூட, புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைவதுண்டு. என்னை அதிகமாக கவர்ந்த புத்தகங்கள் உளவியலும், தத்துவங்களும்தான்.

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எப்பொழுது நூல் எழுத ஆரம்பிக்கப் போகின்றீர்கள் ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது எழுதிக்கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும் . இல்லையென்றால் என் அறைப்பக்கம் வரவும்