பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 53

படிப்பும் , அழகப்பா உடற்கல் விக் கல்லூரி நூலகத்தில் விளையாட்டுத் துறைக்கான அறிவட்ை பெருக்கிக் கொள்வதற்கான படிப்பும் நிற்காமல், நடந்து கொண்டிருந்தது.

விளையாட்டு பற்றி நூல் எழுதவேண்டும் என்ற முயற்சி

ஒருபுறம் தொடர, என்னை வேறு திசைக்கு இழுத்துக் கொள்கிற இன்னொரு காரியமும் கூடவே வந்தது.

கல்லூரி நாடகங்கள் நடத்துகிற பொழுது நாடக உதவியாளராக இருந்த நிலைமை மாறி, நானே நாடகம் எழுதி பாடல் எழுதி இயக்கி தயாரிக்கின்ற பொறுப்பேற்கும் முதன்மை நிலைமைக்கும் உயர்ந்து கொண்டேன்.

அதனால் என்ன நன்மை ஏற்பட்டது என்று கேட்டால், நான் அழகப்பா கலைக் கல்லூரியை விட்டு விலகி, காரைக் குடியை விட்டுக் கிளம்புகிற புதிய சூழ்நிலை உண்டானது என்றே கூறலாம். அது என் விதிப்படியா என்றால், இல்லை விளையாட்டுத் துறை இலக்கியப்படி என்றே நான் கூறுவேன். இந்தத் தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறபோது நீங்களே புரிந்துக் கொள்வீர்கள்.

நாடகம் நடத்துகிற போது, வெளியிலிருந்து ஒப்பனை யாளர்களை, சீன்செட்டு அமைப்பாளர்களை அழைத்துக் கொள்வது வழக்கம்.

எனது நாடகத்திற்கு ஒப்பனையாளராக வந்தவர்களில் தியாகராஜன் என்பவரும், சாமிக்கண்ணு என்பவரும், நாடக நடிகர்கள். காரைக்குடியில் முற்போக்கு நாடக மன்றம் என்பது தலை சிறந்த நாடகக் குழுவாகும், அந்த நாடகக் குழுவில் இவர்கள் இருவரும் காதநாயகர்களாக நடிப்பவர்கள்.

நாடகக் கலையில் மிகுதியான ஆர்வம் உள்ள இருவரும், கல்லூரியில நாடகம் நடக்கிறபோது உதவிக்கு வந்து