பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கலையை ரசித்து நண்பர்களாகி விடுபவர்கள்.

-

எனது விதிவசம், கொஞ்சம் வேகமாகவே வேலை செய்ததுபோலும், தியாகராஜன் என்பவர் எனது வீட்டிற்கு அருகாமையில் குடியிருப்பவர் என்பது அவரின் அறிமுகத்திற்குப் பின் தான் தெரிந்தது.

நாடகக்கலையில் எனக்கிருந்த ஆர்வத்தையும், பாடல் எழுதக் கூடிய ஆற்றலையும் தெரிந்து கொண்ட தியாகராஜன், முற்போக்கு நாடக் குழுவின் நாடகாசிரியராக விளங்கிய திரு தங்கராஜ் என்பவரிடம் போய் கூற, அவரே வந்து என்னை கல்லூரியில் சந்திக்க, முற்போக்கு நாடக மன்றத்தில் நானும் ஒரு அங்கத்தினராக மாற, கவிஞ்ா என்ற பெயரோடு, என் கலைப்பணி அங்கே ஆரம்பமாயிற்று.

நாடகம் கல்லூரியில் முடிந்து போனாலும் நாடகம் பற்றிய பேச்சும், நடிப்பும் என்னோடு ஒட்டிக் கொண்டேன். புத்தகம் எழுதும்போக்கிலே மாற்றம் இல்லையென்றாலும், எனது நேரத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு விட்டது. இல்லை பறித்து கொண்டு விட்டது.

எனது கல்லூரிப்பணி நேரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை,பிறகு மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

கல்லூரிக்கும் வீட்டிற்கும் என்று மூன்று முறை நான் போய் வரவேண்டும். மாலை 6 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து விளையாட்டுடையை மாற்றிக் கொண்டு, நாடக ஒத்திகைக்குப் போனால், வர இரவு 9 மணி.அதற்குமேல் புத்தகம் எழுதுவது.

இதனால் பல கஷ்டங்கள் வாழ்க்கையில் அருவியாக கொட்டிக் குதிக்கத் தொடங்கின.