பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

சொற்கள் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருந்ததாலும், உட்கார்ந்த நிலையிலேயே எனது காலம் கடந்து போய்விடும்.

சில நேரங்களில் 4 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்தை, எழுந்திருக்காமல், ஒரே இடத்தில் உட்கார்ந்தே கழித்ததுண்டு.

சில சமயங்களில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே சரிந்து, விடிய விடிய உறங்கிப் போய் விடுவதும் உண்டு.

சரியான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற வெறியின் காரணமாக, பகல் நேரங்களில் கூட கண்ணை மூடிக் கொண்டு, படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் ‘திருவரங்கப் பள்ளிக்கோலத்திலேயும் இருப்பேன்.

பகலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு வேலைகள், எழுதத் தொடங்கி விட்டால் ஆணியடித்தது போல, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலைமை. இப்படி இரண்டு விதமான நிலைகளில் சுகமாக இருக்கப் பழகி கொண்டது என் தேகம். அதுவே என் பணிகளுக்கு இதமாக இருந்தது.

எப்பொழுது உறங்குவேன்? எந்த நேரத்தில் விழித்துக் கொள்வேன் என்று எனக்கே தெரியாது.அதனால் இரவில் விழித்துக் கொண்ட பிறகு பேப்பர் பேனா இவைகளைத் தேடிக், கண்டுபிடிக்க வேண்டும். அந்த முயற்சிக்குள்ளே முகம் காட்டிய கற்பனையின் முனைமுறிந்து போய் விடும் என்பதால், என் படுக்கையின் பக்கத்திலே, திறந்த நோட்டு புத்தகமும், மூடிபோடாமல் திறந்தே இருக்கும் பேனாவும் எப்பொழுதும் இருக்கும். இரண்டு மூன்று கிடக்கும்.

விளையாட்டுக்களின் வரலாறு எழுதுவதிலே எனக்கு எந்தவித சிரமமும் ஏற்படவில்லை. மாறாக, தமிழில் கலைச்