பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி l

கொண்டோம். எங்களுக்குள் ஏராளமான கேள்விகள். அவரது முகத்திலே புன்னகை பேச்சிலே பூடகம் புதிர். நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும், புகழ்ச்சியும், கொஞ்ச நேரத்தில் எங்களைக் குலுக்கி விட்டன. உலுக்கி விட்டன. நான் தரும் தொகை என்றாரே எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள நாடித் துடிப்பு வெடித்துடிப்பாக வெளி வந்தது.

பதிப்பாளர் சிரித்துக் கொண்டே சொன்னார். 150 ரூபாய் தருகிறேன். புத்தகத்தின் முழு உரிமையையும் எனக்கு எழுதித் தந்து விடவேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

150 ரூபாய் தானா?

மூன்று ஆண்டு காலம் உழைத்த உழைப்புக்கு 150 ரூபாய் தானா ? இருவரும் சிலையாகிப் போயிருந்தோம்.