பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

K- Q

8. என்றாலும் நின்றேனி

Q-or-... வரலாறும் வழி முறைகளும்

என்ற ஒரு நூலை எழுத எனக்கு 3 ஆண்டுகள் ஆயின. இரவும், பகலும் அதே சிந்தனை. ஒரே சிந்தனை.

300 பக்கங்களுக்கு மேல் உள்ள அந்த நூலை, 3 முறை திருப்பித் திருப்பி எழுதியும், திருத்தியும், பொருத்தியும், எழுதியும், திருப்திபடாத நான், நான்காவது முறை எழுதிய பிறகுதான் ஒய்ந்தேன்.

ஏனென்றால், என் உடல் சக்தியும் மனப்பொறுமையும் அதற்குமேல் அனுமதிக்க வில்லை.

இப்படிப்பட்ட இணையிலா என் உழைப்பிற்கு கூலி 150 ரூபாய்தானா? சங்கடத்தால் நெளிந்து கொள்ளத்தான் முடிந்தது.

எங்கேயாவது வசதியான இடத்தில் என் குழந்தை வாழ்ந்தால் போதும் என்று பிள்ளையைக் கொடுத்து விடுகிற பெற்றவளைப் போல, நானும் பெரும் எதிர்பார்ப்புடன் சரியென்று சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

முன் பணமாக 50 ரூபாய், மீதி ரூபாய்க்கு புத்தகங்களாக எனக்குக் கொடுத்தார்கள். கணக்கு முடிந்தது..... ஆனால் காரியம் முடியவில்லை.

இந்தப் புத்தகம் விலைபோகுமா? என்ற வினாவுக்கு