பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 63

விடை, ஆறுமாத காலத்திற்குள் கிடைத்துவிட்டது. போட்ட ஆயிரம் புத்தகமும் விற்றுத் தீர்ந்து போனது. ஆனால் அடுத்த புத்தகம் அங்கே அச்சாகவில்லை.

அடுத்த புத்தகம் எழுதுவதற்கான ஆரம்ப நிலையை, ஆண்டவனே எனக்குக் கட்டளையிட்டது போல, சூழ்நிலைகள் எனக்குத் தூண்டிவிட்டன. தூண்டி விட்டன என்று ஏன் எழுதுகிறேன் என்றால், யாராவது தூண்டி விட்டிருந்தால், நான் முகத்துக்கு நேராக சரியென்று சொல் லிவிட்டு, சுகத்தைக் கெடுக்கிற வேலையில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கி யிருப்பேன்.

ஆனால், துண்டிலில் மீன் மாட்டிக் கொள்வது போல, எழுத்துத் துறையிலே ஆழ்ந்து போகும் அளவுக்கு என்னை சூழ்நிலைகள் நன்றாக மாட்டிவிட்டன. மீட்டிவிட்டன. மூட்டிவிட்டன.

எனது முதல் புத்தகத்தைப் படித்து முடித்த உடற்கல் விஆசிரியர்கள் பலர், என்னை வந்து சந்திக்கத் தொடங்கினர். அப்பொழுது நான், அழகப்பா உடற்கல்விக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் தலைவராக இருந்தேன்.

விளையாட்டுக்கள் பற்றிய விதி முறைகள் எல்லாம், ஆங்கிலத்திலே இருந்ததால், ஆசிரியர்கள் பலருக்கு சரியாக முறையாக புரியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் அந்த ஆங்கில விதிகளை நீங்கள்தான் தமிழில் எழுதித் தரவேண்டும் என்று அடிக்கடி கேட்க ஆரம்பித்தனர்.

அவர்களின் கோரிக்கை நியாயமானதாக எனக்குப் பட்டது.

ஒரு புத்தகம் எழுதினவுடனே எனக்குள் இருந்த அறிவு முழுவதும் தீர்ந்துபோய்விட்டது என்ற நினைவும், இன்னொரு