பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

புத்தகம் எழுதக் கூடிய தலைப்பு கிடைக்காமற் போய்விடுமோ என்ற திகைப்பும் எனக்குள் மனப்போராட்டமாக இருந்த காலநிலை அது.

உடற் கல்வி ஆசிரியர்கள், உடற்கல் விக் கல்லூரி மாணவர்கள் விடுத்த விண்ணப்பமும், வேண்டுகோளும் எனக்குத்துண்டு கோலாக மட்டுமன்றி, தூண்டில் முள்ளாகவும் இருந்தது.

விளையாட்டுக்களின் விதிகள் என்று எனது புத்தகத்திற்குத் தலைப்பும் தந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான், பல சோதனைகள் எனக்கு வந்தன. எனக்கென்று ஒரு தெளிவான சிந்திக்கும் உணர்வும் தோன்றலாயின.

அகில உலக விளையாட்டுக்கழகங்களின் முடிவுக் கேற்ப வருகிற விதிமுறைகளைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றால், யாரிடம் அனுமதி வாங்குவது? இந்தத் திகைப்பான நினைவுக்கு, தீர்வு ஏற்பட பலமாதங்கள் ஒடிவிட்டன.

யாருக்கு அனுமதி கேட்டு எழுதினாலும், பதிலே இல்லை. உங்கள் கடிதம் கிடைத்தது என்று கூட யாரும் பதில் எழுதவில்லை.

காத்திருந்து காத்திருந்து காலம் போனது தான் மிச்சம், இனி என்ன?

இந்தத் தமிழாக்கப்பணி, தமிழ் கூறும் நல்லுகத்திற்கும், தமிழறியும் மக்களுக்கும் தானே பயன்படப் போகிறது? என்ற துணிவான நினைவுடன், என்தமிழாக்கப் பணியைத் தொடங்கி விட்டேன்.

அன்று 1964ம் ஆண்டு எழுதிய கடிதங்களுக்கு, இன்றுவரை பதிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்குத் தகவலும் இல்லை.