பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 65

விளையாட்டுக்களைக் கற்றுத் தருகிற பள்ளிகள், கல்லூரிகள், அங்கே பயிலுகிற மாணவர்கள், பயிற்றுவிக்கிற ஆசிரியர்கள் இவர்கள் பயன்படும் படித்தான், இந்த நூலை எளிதாக, இனிதாக அமைகின்ற வண்ணம் எழுத வேண்டும் என்ற முயற்சியுடன் ஆரம்பித்தேன்.

மொழிபெயர்ப்பு வேலை எனக்கு முதல் வேலையாயிற்றே. யாரிடமாவது காட்டினால், அவர்கள் தவறைத் திருத்துவார்கள், தகுந்த வழியில் நடத்துவார்கள் என்று நினைத்து, உடற்கல்வித்துறையில் பணிபுரிந்த பலரிடம் போய் பெரும் பிரயாசைப்பட்டு எழுதியதைக் காட்டினேன்.

அவர்கள் காட்டிய அலட்சியம் என்னை அயர வைத்தது. நான் ஏதோ அவர்களிடம் கடன் கேட்கப் போனது போல் நினைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

எனக்கு உதவக்கூடாது என்று இல்லை. அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களுக்குத் தெரியாது என்று என்னிடம் சொல்ல அவர்களுக்கு வெட்கம், அதனால், என்னை அலட்சியப் படுத்தினாலாவது அவர்களிடம் நான் திரும்பவும் வரமாட்டேன் என்று நடந்து கொண்டனர் என்று பல வருடங்களுக்குப் பிறகுதான் புரிந்தது.

பலரிடம் காட்டினால், பிழைகள் இல்லாமல் இருக்கும். நல்ல புத்தகமாக அமையும் என்பது என் எண்ணம். என் மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காகவே, அவர்களிடம் வருகிறேன் என்று, சிலர் நினைத்துக் கொண்டு என்னை நான் இல்லாதபோது, தூற்றியிருக்கின்றனர்.

அந்த விஷயத்தையும் அப்புறம்தான் புரிந்து கொண்டேன்.

ஒரு சிலர் நான் எழுதியதை வாங்கிப் படித்து விட்டு, இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்றனர். அவர்கள் போகாத ருக்கு வழிகாட்டு வது போல, எனக்கு புத்திமதி