பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

கூறியிருக்கின்றார்கள். -

இந்த வேலையெல்லாம் உனக்கு எதற்கு? தமிழில் எழுதி நீ ஒன்றும் கிழித்துவிட போவதில்லை. இது யாருக்கும் பயன்படப் போவதில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு புண்ணியமும் உனக்கில்லை என்று ஒரு புலம்பலோடு, எழுதிய தாள்களைத் திருப்பிக் கொடுத்தார்கள் சிலர்.

நானும் வாங்கிக் கொள்வேன். அவர்கள் பேச்சிலே, எனக்கு எது உதவுமோ, அவற்றை மட்டும் எடுத்துக் கொள்வேன். மீதி வார்த்தைகள் எல்லாம் என் காதிலே மோதி, கால்களுக்கடியில் விழுந்து விடும். நானும் கருமமே கண்ணாயினார் என்றபடி திரும்பி வந்து விடுவேன்.

இப்படியாக, விளையாட்டுகளின் விதிகள் என்ற புத்தகத்தை, நானே எழுதி எழுதி, திரும்பப் படித்துப் படித்துத் திருத்தி, பல ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் வார்த்தைகள் கண்டுபிடித்து எழுதி முடித்தேன்.

மீண்டும் ஒரு குழப்பம், தடுமாற்றம்.

இந்தப் புத்தகத்தை யார் மூலமாகப் பதிப்பித்து வெளிக்கொணர்வது?

அழகப்பா உடற்கல் விக் கல்லூரி முதல்வராக அப்பொழுதிருந்த டாக்டர் ராப்சன் அவர்களிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது, முன்னாள் மாணவர்கள் கழகம் (Alumni Association) | 1.5 ou GL133, off gigs.

கழகத்தின் நிதி நிலை பற்றாக்குறையாக இருக்கிறது. அதை எப்படியாவது சமாளித்திட வேண்டுமே என்றார் முதல்வர்.

எனது புத்தகத்தை வெளியிட்டீர்களானால், இந்தப் பிரச்சினையை எளிதாக சமாளிக்கலாம் என்றேன். அவர் மனம்