பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஏனென்றால், 2வது புத்தகத்திலேயே எனக்கு எதிர்ப்பு அவர்களால் வந்து விட்டது என்றாலும் 100க்கு மேலாக வருவதை நிறுத்த இயலவில்லை.

சிரித்து உறவாடிய சிநேகிதர்கள்தான்இந்த சகிக்க முடியாத காரியத்தில் இறங்கினார்கள். இன்றும் அவர்கள் என்னை நேரில் பார்க்கும் போது கட்டித் தழுவிக் கொள்கிறார்கள், முகம் மறைந்ததும் முதுகுப்புறம் தூற்றியும் சபித்தும் சுகம் காணுகின்றார்கள்.

விளையாட்டுகளுக்குத் தான் விதிகளை எழுத முடிந்தது என்று வெற்றிப் புன்னகையில் திளைத்திருந்தேன். ஆனால், விளையாட்டுத் தனமாக என்னோடு விதி விளையாட வருவது தெரியாமலே நான் மகிழ்ந்திருந்தேன்.

ஒரு நாள் நாடக ஒத்திகை இருக்கிறது என்று நாடக ஆசிரியர் காரைக்குடி தங்கராஜ் அவர்களிட மிருந்து அழைப்பு வந்தது. கல்லூரி விட்டதும் வருகிறேன் என்று வந்த ஆளிடம் சொல்லி அனுப்பினேன்.

1965ம் ஆண்டுமார்ச்சுமாதத்தில் ஒரு நாள் மாலை 3 மணி இருக்கும். தங்கராஜ அவர்களின் வீட்டிற்கு போன போது நான்கைந்து பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் புதியவர்.

வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து, நெற்றியிலே சாந்துப் பொட்டு குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டிருந்தார். பார்த்தால் மலையாளி போல இருந்தார். பெயர் நினைவுக்கு வரவில்லை.

கல்லூரியில் பேராசிரியர் , கவிஞர், நடிகரும் கூட என்று அந்தப் புதியவருக்கு என்னை நாடக ஆசிரியர் அறிமுகப்படுத்தி வைத்தார். வணக்கம் செய்தேன். அவரும் புன்சிரிப்புடன் கை