பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 9

குவித்தபடி உங்களைப் பற்றி சில விஷயங்கள் சொல்லலாமா என்றார்.

ஜோசியமா என்றேன்......

ஜோசியம் என்று இல்லை. ஆனால், சொல்ல வேண்டும் போல இருக்கிறது என்ற பீடிகையுடன் பேச்சை ஆரம்பித்தார். உங்களுக்கு மகிழ்ச்சி தருமானால் சொல்லலாம் என்றேன்.

உங்கள் சாமுத்திரிகா லட்சணப்படி பார்த்தால், உங்கள் முதுகில் வலப் புறப் பகுதியில் ஒரு பெரிய மச்சம் இருக்கவேண்டுமே என்றார். முகத்தைப் பார்த்து ஜோசியமா? எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன்.

வாக்குவாதம் எதற்கு? சட்டையைக் கழற்றுங்கள். பார்த்து விடுவோம் என்று தங்கராஜ் சமாதானப்படுத்தினார். சட்டையைக் கழற்றினேன். உண்மை தான். முதுகிலே அவர் கூறிய இடத்தில் ஒரு மச்சம் இருந்தது.

கொஞ்சம் அசடு வழிய சிரித்தபடி அவரை பார்த்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை யென்றால், இன்னும் சிலவற்றை கூறலாமா என்றார். சம்மதம் தெரிவித்தேன்.

நீங்கள் வீட்டிற்குப் போங்கள். உங்கள் மனைவியிடம் கேளுங்கள். உங்களுக்கு வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்றார். முதல் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள். மூன்றாவதும் பெண் குழந்தையாயிருக்கும். அதனால், இப்போது வேண்டாம் என்று இருந்த சமயத்தில், அவரது ஜோசியம் இப்படி கூறியதும் அதிர்ச்சியடைந்தேன்.

இது என்ன அதிர்ச்சி? இதையும் கேளுங்கள். இப்போது செய்து கொண்டிருக்கிற வேலையில் நீங்கள் தொடர்ந்து இருக்கப்போவதில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, கிழக்குத் திசை நோக்கி,