பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

பெற்றுக் கொண்டு, தங்க ராஜூடன் நானும் சென்னைக்கு வந்தேன். ஒரு வாரம் தங்கினேன். சினிமா ஆபிஸ்-க்கு என ஒரு வீடு எடுத்து, நாற் காலி மேஜை வாங்கி செட்அப் செய்த நேரத்தில், ஒரிரு சினிமாகம்பெனிகளுக்கு கேமராமேன் ஜி. கே. குட் டி அவர்கள் என்னை அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தினார். அவர்களும் எனக்கு பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்பளிப்பதாக உறுதி கூறினார்கள்.

நானும் மிகுந்த நம்பிக்கையுடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியடைந் தேன். காரைக் குடிக் குப் பெரும் கற்பனைகளுடன் திரும்பினேன். ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு மூன்று முறை, சென்னைக்கு நான் வந்து போக வேண்டிய சூழ்நிலையும் வந்தது.

‘ஆயிரத்தில் ஒருத் தி ‘ என்ற படம் ஒன்றுக்கு பாடல் எழுதுமாறு ஒம் சக்தி பிலிம்ஸ் உரியைாளர், இயக்குநர் திரு கந்தசாமி அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். ஒரு நாள் முழுவதும் இசையமைப்பாளர் நடேஸ் என்பவருடன் அமர்ந்து. பாடல் எழுதி முடித்து, இசையும் அமைக்கப்பெற்று, அடுத்த நாள் ரெக்கார்டிங்கிற்காகத் தயாராகி விட்டோம்.

ஆனால், ஸ்டுடியோ வரை சென்று, ரெக் கார்டிங் தியேட்டரிலும் நின்று, பாடுகிற ஒரு பெண்மணிக்கு தொண்டை சரியில்லாமல் போகவே, அன்று நின்று போயிற்று.

அடுத்தநாள் ரெக்கார்டிங் என்றார்கள். அந்த நாள் மீண்டும் வராமலே போயிற்று, பார்ட்னர்கள் இருவருக்குள் புகைச்சல் என்றதால், பிளவுபட்டு, என் முதல் முயற்சியே முனைமுறிந்து போயிற்று.

அடுத்தடுத்து, என் முயற்சிகளுக்கு சென்னை வரவேண்டிய நிலைமை வந்தது. குறிப்பிட்ட நபர்களுக்குக் கடிதம் எழுதி, நாளும் தேதியும், நேரமும் குறித்துக் கொண்டு சென்னைக்கு வந்தாலும், அந்த நபர்களை சந்திக்க முடியாமல் போனதால், எனது மனதுக்கு வேதனையாகவே இருந்தது.