பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 77

கொண்டது. எப்படி சென்னையிலே வந்து தங்குவது, வேலை பார்ப்பது என்பதில் அல்ல அந்தக் குழப்பம். நிரந்தரமான வேலையை விட் டுவிடப் போகிறோமே அவனவன் உத்தி யோகத்திற்கு ஆளாய் பறக்கிறான். அதுவும் கெளரவம் மிகுந்த கல்லூரி வேலையை விட்டு விட்டு, பள்ளிக்கூடம் ஒன்றில்

வந்து, என்று மனதுக்குள்ளே தடுமாறினேன்.

எனக்கு யோசிக்கக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், காரைக்குடி சென்று இன்னும் கொஞ்சம் தீவிரம்ாக யோசனை செய்துவிட்டு உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன் என்றேன் அதற்கும் அவர்கள் சம்மதித்தார்கள்.

படத்திற்குப் பாட்டு எழுத சென்னைக்கு வந்த நான், பாதுகாப்பாக ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டேன். அதை ஏற்றுக் கொள்ள ஆசையிருந்தாலும் அந்த ராத் மா அரற்றிக்கொண்டு தடுத்தது.

கல்லூரி வேலையை விட்டு விடுவதா, சென்னை வேலையைத் தள்ளி விடுவதா, என்ற குழப்பத்துடன், காரைக்குடிக்கு புறப்பட்டேன்.

இரண்டு புத்தகங்கள் எழுதிய ஆசிரியர் என்ற மரியாதை மனதுக்குள் ஒரு தெம்பு, இதற்கும் மேலாக இன்னொரு குறிப்பு.

சென்னையிலிருந்து வெளியாகின்ற புத்தகங் களுக்குத்தான் மக்களிடையே மரியாதை, எவ்வளவு தான் அருமையான புத்தகமாக இருந்தாலும், கிராமப்புற நூல்கள் என்ற கேலியும் கிண்டலும் இருந்ததால், சென்னை வாழ்க்கையை நான் விரும்பியதும் உண்டு.

வெற்றிகரமாக விதி எனக்கு வழிகாட்டியது, புதிய வேலையை பார்ப்பது என உறுதி எடுத்துக் கொண்டேன்.

சென்னை வந்த பிறகு எத்தனை எத்தனை கஷடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று தெரியாமலே, நான் உறுதி எடுத்துக் கொண்டேன். சிரமப்படவா நா சென்னைக்கு புறப்பட்டேன்.