பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8()

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இப்படியாக, நான் நினைத்தது நடந்தது. வேலையும் கிடைத்தது. சினிமா வாய்ப்புகளும் இருந்தது. புத்தக வேலையும் தொடரும் என்ற எனது நம்பிக்கைகள் எல்லாம் எப்படியெல்லாம் மாறிப்போயின. தெரியுமா?

சென்னை வந்து சேர்ந்த பிறகு, என்னை தங்கராஜ் வந்து வரவேற்றார். தான் தங்கியிருந்த சேம்பியன் மூவிஸ் ஆபிசிலே என்னையும் தங்க வேண்டும் என்றார். தியாகராய நகரில் உள்ள, தண்டபாணி தெருவில் இருந்த அந்த வீட்டில் தங்கிக் கொண்டு, பள்ளியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன்.

பகல் முழுவதும் பள்ளியில் வேலை, மாலை வந்ததும், சினிமா ஆட்கள் ஆபீசுக்கு வந்து விட. அவர்களுடன் ஆலோசனைகள். இதற்கிடையே கேமராமேன் ஜி.கே. குட்டி அவர்களுடன், பல கம்பெனிக்குச் சென்று, தயாரிப்பாளர்களை சந்தித்தல், இப்படி ஒரு சில மாதங்கள் ஒடித் தொலைந்தன.

கதை ஆசிரியர் தங்கராஜ் , டைரக்டர் ராஜேந்திரன் இவர்கள், ஒரு ரூபாய்’ என்ற கதையை, படமாக்க முயற்சி செய்தார்கள் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்தால், நன்றாக இருக்கும் , பைனான்சியரும் அதே கருத்தைத் தான் விரும்புகிறார் என்று இயக்குநர் சொல்ல, என் கதையில் ஒர் எழுத்தைக் கூட மாற்றமாட்டேன் என்று தங்கராஜ் அடம்பிடிக்க, இதனால் படவேலை மிகுந்த தாமதாயிற்று, மன வேறுபாடு தயாரிப்பாளர் இயக்குநர் கதாசிரியர். இவர்களிடையே நிறைய ஏற்பட்டு, கம்பெனியை கலைத்து விடுவதென்று முடிவு ஏற்பட்டது.

காரணம் - நான் கொடுத்த பணம், ஆபீஸ் பொருட்கள் வாங்கியது போக, மீதியான அட்வான்ஸ் தொகையும் வாடகையாக கழிந்து போயிற்று. பிறகு யார் வாடகை தருவது?