பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

கருனை மனம் கொண்டவர்கள் என்று எல்லோரும் அவர்களை புகழ்வதை நான் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கும் அந்தக் கருணை உள்ளம், கைமாறு கருதாமல் உதவுவதற்கு முன் வந்த அந்தத் தாய் உள்ளத்தை, இன்றும் என்மனதில் தெய்வமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு விருப்பமானால், இந்தப் பள்ளியிலேயே ஒரு அறை தருகிறேன். தங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்குப் பள்ளி தாளாளர் திருமதி சாரி அவர்களும் ஒப்புதல் தந்தார்கள்.

எனக் கென்னவோ, பள்ளியிலே தங்கிக் கொள்ள, சங்கடமாக இருந்தது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்கிறேன் என்றேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல் வரும், எங்கள் வித்யா மந்திர் பள்ளியின் நிர்வாக இயக் குனராக இருந்த வருமான திரு சேஷாத்திரி அவர்கள் வந்தார்கள்.

எங்கள் முகத்தில் இருந்த சீரியஸ்னலை ப் பார்த்து, சேதி என்னவென்று கேட்டார். திருமதி தாரா அவர்கள் என் கஷட நிலையைக் கூறினார்கள்.

இதென்ன பெரிய பிரச்சினை? இந்த சாவியைப் பிடியுங்கள் என்று ஒரு சாவிக் கொத்தைக் கொடுத்தார்.

நாங்கள் திகைத்து உட்கார்ந்திருந்தோம்.

‘இந்தியப் பெரும் விஞ்ஞானி, சர். சி.வி இராமன் அவர்களுக்குரிய வீடு, தற்போது என் பாதுகாப்பில் தான் இருக்கிறது. எப்பொழுதாவது தான் போய், தங்கி ஒய்வெடுப்பது வழக்கம், இவர் ஒரு புறம் தங்கிக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொள்ளட்டும் என்றார்.

அவரின் தயாள குணத்தைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.