பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

வளர்த்துக் கொள்ளவும், விருத்தி செய்து கொள்ளவும் வெகுவாக உதவின.

நான் பி. ஏ. வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம். அப்பொழுது, நிறைய வார இதழ்கள், மாத இதழ்கள் வெளிவந்தன. ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது கொள்கைப் பிடிப்பை காட்டிக் கொள்ள, அழகு தமிழில் ஆரவாரப் போக்கிலே எழுதித் தள்ளினார்கள். அத்தனைத் தமிழ்வேகம் இந்த பத்திரிக்கைகளில் வேகமாய் முழங்கி வாசகர்களின் தாகம் தீர்த்து உதவின.

கல்லூரி மாணவனான எனக்கு, அந்தப் பத்திரிகைகள் தந்த தமிழ்ப் பற்றும் தமிழ் வேகமும், உணர்வோடு கலந்து கொண்டது. இது ஒரு நிலை.

இன்னும் ஒன்று, விளையாட்டுகள் என்றால் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த எனக்கு முழங்கால் முட்டில் அடி, கணுக்கால் பிசகல், தோள் மூட்டில் பாதிப்பு, இடுப்பு பகுதியில் அடி, இப்படி பல விதங்களில் உடல் பாதிக்கப்பட்டிருந்தபோது, இனிமேல் போட்டி வினையாட்டுக்களில் ஈடுபட்டால், ஏற் பட்டிருக்கும் காயங்களும் கோளாறுகளும், உங்களைப் படுத்த படுக்கையில் தள்ளிவிடும் என்று டாக்டர் ஒருவர்.அச்சுறுத்தி, அறிவுறுத்தியும், பொழுதைப் போக்கிட துப்பறியும் கதை புத்தகங்கள் தான் எனக்குத் துணையாக இருந்து, படுக்கையில் ஒய்வெடுக்க உதவின.

துப்பறியும் கதை படிப்பது என்றால் அந்த புத்தகத்தை முடித்துத் துர எறியும் வரை விடாமல் தொடர்ந்து படிக்கின்ற பழக்கம் எல்லோருக்கும் இருக்குமே! இந்தப் பழக்கம் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஆயிரக்கணக்கான