பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 7

விளையாட்டுத்துறை நூல்களை எழுதுவதற்காகவே ஏற்பட்டன. ஆமாம். நானே ஏற்படுத்திக் கொண்டேன். சகிக்க முடியாத அவமானங்களை, தாங்க முடியாத அனுபவங்களை, எழுதுகிறபோது ஏற்படுகிற இடர்ப்பாடுகளை; ஏற்பட்ட கேடுகளை புத்தமாகப் பார்க்கிற போது, பெற்ற சுக அனுபவங்களையெல்லாம், இங்கே எழுதித் தந்திருக்கிறேன்.

இது என் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட என் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்புதான்.

விளையாட்டு இலக்கிய வளர்ச்சிக்காக எழுத முன் வருகிற எதிர்கால இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்ட, நல்ல எதிர்காலத்திற்கு வழிகாட்ட, எனது நூல் உதவும் என்று உங்களிடம் வழங்கியிருக்கிறேன்.

என் இலக்கிய நூல்களுக்கு, ஆதரவு தந்த தமிழ் மக்களுக்கு என் நன்றி. அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்சுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

லில்லி பவனம் அன்புடன்,

சென்னை - 17 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.

குறிப்பு: விளையாட்டுத் துறைக்கான தமிழ் இலக்கிய நூல்களை எழுதத் தொடங்கிய பொழுது ஆசிரியர் எடுத்த புகைப்படம் அட்டையில்.