பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கொண்டார்கள். -

‘'நான் இப்ப்ொழுது பாண்டிச்சேரி போகிறேன். போகிறபோது படித்துப் பார்க்கிறேன் முடிந்தால், இசையை அமைப்பதற்கு முயல் கிறேன்’ என்று கூறியபடி அவர் புறப்பட்டுப் போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்தும், எந்தவிதத் தகவலும் வரவில்லை. அன்று மாலையே ஒரு ஆள் வந்து, தலைமை ஆசிரியையை வரச்சொல்லி அழைத்தான். தலைமை ஆசிரியையும் அவர்களைப் பார்க்கப் புறப்பட்டார்கள். நாங்கள் காரணம் புரியாமல் , ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டோம்.

விரைவில் திரும்பி வந்த திருமதி தாரா கூறிய பதில், எங்களை, குறிப்பாக, என்னை வெகுவாக வியப் பில் ஆழ்த்தியது.

‘பாண்டிச்சேரி சென்ற அந்த அம்மையார், காரில் போகும் போதே, கவிதையைப் படித்திருக்கிறார், மிகவும் பிடித்துப் போய் விட்டதால் , அங்கேயே இசை அமைக்கத் தொடங்கிவிட்டார். காரிலே பயணம், கையிலே கவிதை, கருத்தோ இசை லயத்தில்.

காரியம் முடிந்து வேறொரு காரை மாற்றிக் கொண்டு சென்னைக்கு வந்தபோது, அந்த அம்மையார் கவிதையை கை தவறுதலாக எங்கேயோ வைத்து விட்டு, சென்னை வந்து சேர்ந்து விட்டார். ‘

இதுவரை எந்தவித ஈடுபாடும் இல்லாமலே கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அவர் மேலும் கூறியது அதிர்ச்சியாகவே இருந்தது.

‘கை தவறிப்போன அந்த ஸ்கிரிப்ட், கிடைக்கும் வரை