பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

‘உங்கள் இராமாயண நாடகப் பாடல்களை ரசித்துப் படித் தேன். சென்னை வானொலியின் மூலமாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதனால், சென்னை வானொலி டைரக்டருக்கு, உங்கள் ஸ் கிரிப் டை அனுப்பி வைத் திருக்கிறேன். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவரை சந்தித்துப் பேசலாம்’ என்பதாக வாழ்த்தி எழுதி இருந்தார்.

கடிதம் கிடைத்தவுடனே காற் றெனக் கிளம் பினேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கிடந்தவன் ஆயிற் றே திரு சீனிவாசன் அவர்களிடம் இந்த சேதியைச் சொன்னேன். பிறகு தான் தெரிந்தது. இந்த வேலை திரு சீனிவாசன் அவர்கள் செய்தது தான் என்று.

திரு சீனிவாசன், சென்னையிலிருந்து அவரது உறவினர் ஒருவரிடம் என் பாடல்களை காட்ட, அவர் தனது கணவரான திரு கிருஷ்ணசாமி அவர்களுக்கு அனுப்பி வைக்க, இப் படித்தான் எனக்கு அழைப்பு வந்தது என்று தெரிந்து கொண்டு, அவர்களுக்கு நன்றி கூறினேன்.

கடிதத்தை எடுத்துக் கொண்டு, சென்னை வானொலி நிலையம் சென்று, இயக்குநர் அவர்களை சந்தித்தேன். நீங்கள் அப்யாசாமி என்பவரை சந்தியுங்கள், சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு அவர்தான் பொறுப்பாளி, உதவுமாறு சொல்லுகிறேன் என்று போனும் செய்தார்.

இவ்வளவு சிபாரிசு இருக்கிறதே! வானொலியில் பங்கு பெற வேண்டும் என்ற நமது கனவு நினைவாகிவிடும் என்ற நம்பிக்கையுடன், நடைக்கு வேகம் கொடுத்து, அய்யாசாமி (வானொலி அண்ணா) என்பவரின் அறை வாசலில் போய் நின்றேன்.

நவராஜ செல் லை யா உள்ளே வாருங்கள் என்ற குரல் - #