உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வைத்தியரைக் கூட்டியாந்து கைபார்க்கச் சொல்லிப் பிட்டு வந்தேன். அடுப்பிலே அரை வேக்காடிலே இருந்த கஞ்சியை இறக்கி வச்சுப்பிட்டு வரக்கூட முடி யல்லலே 1:

கொண்டவனின் கோலமுகம் வள்ளியின் கிஜனவில் நிழலாடியது. அவளைக் கொண்டவன் சிங்காரம். சிக்கல் சிங்கார வடிவேலனைப் போலவே சிங்காரமான வன் ; அவன் சிரிப்பு அவளுள் எதிரொலித்துக்கொண் டிருந்தது. அந்தம் கலைந்த புள்ளிக் கோலம் போன்று பாயும் படுக்கையுமாகக் குடிசையில் கிடந்த தன் ஆசை மச்சானின் நேசமும் அவளது கண் கடையில் நீர் காட் டிற்று ; நினைவு தடுமாறினுள் அவள்.

ஏ புள்ளே:வள்ளி அய்யனர் குதிரை யாட்டம் கின்னுக்கிட்டேயிருந்தாப் போதுமா?.தஞ்சாவூர் கார் போய்க்கூட ஒரு நாழிகைப் பொழுது கழிஞ்சிடுச்சே?... ஏன் இவ்வளவு நேரம் ?...’

நடப்பைச் சொன்னுள் வள்ளி; கடந்ததை நம்ப வேண்டியவரானுர் நாற்பதைத் தாண்டியவர். . சரி, இன்னிக்குமட்டும் உனக்கு மாப்பு விட்டிருக் கேன். இன்னெரு வாட்டி இப்படி பத்து நாழிகைப் பொழுதுக்கு வேலைக்கு வந்தா வீட்டுக்கே திருப்பி அனுப்பிச்சிடுவேன். ம்...போய் வேலையைப் பார் !

‘நல்லதுங்க, எசமான்! தட்டுக் கூடை கைதட்டி வள்ளியை அழைத்தது ; சோற்றுப் பொக்கிஷத்தை அருகிருந்த மொட்டைப் பூவரச மரக் கிளையில் தொங்கிடச் செய்தாள் ; உடன் கொணர்ந்திருந்த பழஞ் சேலைக் கிழிசலைச் சும்மாடு : சுற்றித்தலையில் வைத்து, அதன்மேல் மூங்கில் கூடை மத்தி வைத்து வழி நடந்தாள் சரளைக் கற்கள்.