105
கர்ப்பக் கிருஹத்தின் உள்ளே நிறைந்திருந்த வெள்ளத் தில் ஈசன் சில நின்றதையும் கண்டு, மூக்கில் விரல் வைத்து அதிசயப்படவும் செய்தனர். அந்தத் தண்ணி ரும் மாயமாக மறையும்படி பக்தர்கள் வேண்டுதல் செலுத்தினர். உடனே அவ்வாறே கடந்தது. அடை மழைக் காலங்களில் மட்டும் ஊர் பேர் இன்றி வெறும் ஆருக இயங்கி வந்த அந்த ஆற்றை அதற்கப்புறம் ‘அக்கினி ஆறு என்றே எல்லோரும் அழைத்தனர். பெரும்பாலான நாட்களில் அந்த மணல் ஆற்றினைக் கடந்து செல்லும்போது, அக்கினி ஆற்றைக் கடந்து செல்வதேபோன்றுதான் உணர்வு ஏற்படுமென்ற காரணமாகவே இருக்க வேண்டும் பெயரில் என்ன இருக்கிறது ? இல்லை, காரணத்தில் என்ன உள்ளது?... எதுவும் இறைவனின் செயல்தானே !...
பஸ் போக்குவரத்து தொடங்கப்படவிருந்த தரு னத்திலே பஸ் உரிமையாளர் ஒருவரும் இரு ஊர் பெரியதனக்காரர்கள் சிலரும் சேர்ந்து தஞ்சை ஜில்லா போர்டின் அனுமதியும் உதவியும் பெற்று, மழைகாலத் தில் தடையாக இருக்கும் இந்த அக்கினி ஆற்றுக்குப் பாலம் சமைக்கத் திட்டம் போட்டார்கள். காரியம் செயல் வடிவுபெற ஒரு வருஷம் ஆனது; பாலமும் உருவாகத் தொடங்கிவிட்டது. அடுத்த சித்திரை வந்தால், அக்கினி ஆற்றுப் பாலத்திற்கு திறப்பு விழா கடைபெறும் - - -
எல்லாம் கடவுள் கிருபை !’ என்ற குரல்கள் காற்சந்திகளிலும் எதிரொலி செய்தன. - -
ரெயில் தண்டவாளத் துண்டில் இரும்புக்கழி எழுப்பின ஒலி, பாலத்தில் வேலை பார்த்துக்கொண் டிருந்தவர்களுக்குப் பசியைக் கிள்ளிவிட்டிருக்க வேண்