உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

சாமிதான் கம்பளைக் காப்பத்தவேனும் !” என்று அவளுடைய துணைவன் சிங்காரம் ஆறுதல் மொழிந்த வார்த்தைகள் அழிந்த முரசொலியின் பாங்கிலே தேய்ந்து ஒலித்தன. ஆறு வயசுச் சிறுமியான செவக் தியை அவள் எப்படி மறப்பாள் ‘அம்மா, வாரப்போ தேத்தண்ணிக் கடையிலே காராப்பூந்தி வாங்கியார னும் ! என்று நினைவுக் குறிப்பைக் கொடுத்தல்லவா அவள் வழியனுப்பி வைத்தாள்?

கண்களிலே நிரம்பின நீரை வள்ளியால் துடைக்க முடிந்தது ; இதயத்தின் கண்ணிரை வழித்துவிட அவளால் இயலவில்லை. பழங் கஞ்சியும் பட்ட மிள காயும் உப்புக் கல்லும் அவளைக் கைகொட்டி அழைத் தன. துணி முடிச்சை அவிழ்த்தாள். கணவனும் மகளும் மாறி மாறித் தோன்றினர்; வெம்மி வெடித்தது நெஞ்சு ; கதறிய உள்ளத்தின் கண்களை மூடி மறைத்து விட்டு, சோற்றுக் கவளத்தை அள்ளி வாயில் திணிக்க முற்பட்ட சமயத்திலே, பாலத்தின் ஒரமாக ஜனக் கும்பல் தெரிவதை உணர்ந்தாள் ; ஒருவேளை மச்சான் வந்து நடக்க முடியாம மயக்கம் போட்டு விழுந்திருக் குமோ ...பணம் காசை முன்னலே வாங்கிக்கினு போய் காட்டு வைத்தியர்கிட்டே கொடுத்து மருந்து சாப்பிட எண்ணியிருக்குமோ ?...இல்லே, செவந்திதான் என்னைத் தேடிவந்து ஆபத்திலே அகப்பட்டிருக்குமோ?’ என்று அலை பாய்ந்த மனத்துடன், பிடி சோற்றை அப்படியே போட்டுவிட்டு, கையலம்பியவாறு விரைந்து சென்றாள் வள்ளி. அவள் அக்கூட்டத்தை அண்டியதும், செவி களில் மோதிய அனுதாப மொழிகள் இவை :- “ஐயோ பாவம் ..கொஞ்ச வயசு ஆம்பளையாட்டம் தான் தோணுது : பாவம், யாருமேயில்லாத அைைத போலே!...உடம்பெல்லாம் நெருப்பாக் கொளுத்துது...