9
- ல"லவுண்டே என்பது பர்மாவைப் பொறுத்த வரை மிகவும் புனிதம் மண்டிய ஒரு நிகழ்ச்சி. காவி. புடைதரித்த பெளத்த முனிவர்களான பொங்கிகளுக் குப் பிட்சையிடும் சம்பவத்தைத்தான் அவர்கள்
அப்படிச் சொல்வார்கள்.
அப்படிப்பட்டதொரு நாளிலே, காச்சியப்பன் * பன்னுவைப் போட்டுக்கொண்டு மாஸோஹறினைத் தேடிச் சென்றார் பெகு, தாராவடி, மாண்டலே: டோங்வா, மோல்மீன், இரங்கூன், ப்ரோம் பின்மனு ஆகிய பகுதிகளில் ஜப்பானியர்கள் ஆடிய கோரத் திருவிளையாடல்களைப் பற்றிச் சொன்ன பத்திரிகைச் செய்திகள் அவரது கெஞ்சின் அடிவாரத்தில் எதிரொலி பரப்பின. மூச்சு விடாமல் மரக்கடையை நம்ப பெரியாத்தா மகன் கிட்ட ஒப்படைச்சிப்பிட்டு, செட்டி, காட்டுக்குப் போயிற வேண்டியதுதான் நிலைமை சீர்ப்பட்டதும், ரங்கூன் முகல் வீதிக்குப்போய் ஆறறையிலே சொக்கலிங்க அண்ணனைக் கண்டு தண்டி காரியத்தை முடிச்சுப்பிட்டாத்தான் சிலாக் கியமாயிருக்கும் என்று எண்ணப் பூக்கள் மனமெனும் காரில் கனவு மாலை தொடுத்தன. அதே கணம், பர்மாவிடமிருந்து ஏற்படப் போகும் பிரிவை நினைத்த தும், அவருக்கு நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்: தது. போர்ப் பின்னணியில் உழன்று மரக்கடைத் தோட்டத்தில் மனம் தவித்துக் கொண்டிருக்கையில்
எங்கனும் தோன்றித் தோன்றி மறைந்த அந்த எழில் உருவைப் பற்றிச் சிந்தித்தார். . ஆறு. நாட்களே மனப் புழுக்கத்தில் சிதற விட்டு ஏழாம் நாள் பொழுது பட்ட தும் காச்சியப்பன் புறப்பட்டார். அப்போது, மாலோ