உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

கொண்டிருக்கையில், அன்னக்கிளியின் விழி விரிப்பில தன் தமக்கையின் கணவன் சிங்காரத்தின் உருவம்

அக்கா!...அதோ அத்தான் ‘ என்றாள் அன்னக்

தானே கீழே இறங்கிவிட முயன்றுகொண்டிருந்த கனகலிங்கத்தைக் கண்டதும், தன்னையறியாமலேயே தன் வலதுகையை அவனிடம் நீட்டினுள் அன்னக்கிளி. இக்காட்சியை விழி விரியப் பார்வையிட்டபடி துணை காடினுள் வள்ளி.

பனங்குளத்தில் தினகரன் இறங்குமுகத்தில் இருந்த வேளை அது. -

“ வள்ளி, கனகலிங்கமா அது ?...போ !...நீ உத விக்கு நின்னு அவரை உள்ளே கொண்டுபோய்ப்படுக்க வை. வைத்தியர் ஐயாவும் வந்திடுவாக, கானே இந்த உடம்போட கனகலிங்கத்தைத் தேடிவரத்தான் புறப் பட்டேன்!...” என்றான் சிங்காரம், வள்ளிக்குத் தன் செவிகளே கம்ப இயலவில்லை. தயங்கினுள்.

‘ம்! சல்தியாப் போ வள்ளி 1.உன் தங்கச்சியை விலகிக்கிடச் சொல்லு, கன்னிப் பொண்ணு இன்னொரு ஆம்ப8ள கையைப் பிடிக்க வேணும். அப்பாலே நாக் கிலே கரம்பில்லாம ஊரிலே ஏதாலும் பேசுவாங்க இதயத்தை அடகுவச்ச பாவிங்க ...நீ போ வள்ளி... பாவம், அவர் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவார் போலே!...” என்று மீண்டும் கூறினன் சிங்காரம் அவனது உயர்ந்த மனிதப் பண்பு அவள் விழிகளைக் கலங்க வைத்தது. அவள் மனம் அமைதி கண்டது; தன் நீதி பலித் ததைக் கண்டு அவளது மனச்சான்று மகிழ்ச்சி பூண்டது. -