உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

விளையாடிய சீதள நிலாவின் முகம் பாப்பாவின் நிலவு முகத்தில் ஆட்டம் போட்டது. திரும்பவும் மகளைப் பார்வையிட்டார் அவர் தாலியும் மாலையுமாகத் திகழப் பொலிவு காட்டினுள் அவள், கெஞ்சத்தில் சுரந்த பாசத் தின் ஈரம் விழிகளில் கரை கட்டிற்று. என் வீட்டிலே கடக்கக்கூடிய முதல் கல்யாணம் ஆயிற்றே இது :சிந்தனையின் லயிப்பில் கண் புனல் வழிந்தது ; கட்புலம் விழித்தபோது, இதயம் காட்டிய ஏதோ ஒரு கினேவு மூடிக் கொண்டது. ... . . .”

- மனைவி காமாட்சியின் கை பட்ட கல்லும் இனிக் கும் என்பது செட்டியாரில் நெடுநாளையக் கருத்து. ஏனெனில், அவரது கருத்தைக் கவர்ந்தவள் அவள். ஆலுைம், அன்றுதினம் அவருக்கு அவள் கேசரி, அல்வா எல்லாம் படைத்தாள். கல்லேக் காட்டவில்லை யாதலால், அவை இனித்தன. உப்புமா பரிமாறினுள். அதில் உப்பு கச்சிதமாக இருந்தது. உண்டு முடிந்தது. தாம்பூலச் சிவப்பு மண்டியிட்ட இதழ்களைப் பரப்பி அவர் ஆதார பூர்வமாக வெளியிட்ட செய்தி இதுதான்: * காமாட்சி ! நம்ம பாப்பாவுக்கு நல்ல மாப்பிள்இள திகைஞ்சிருக்குது. கண்ணுக்குக் கண்ணுன பிள்ளே ; கண் கிறைஞ்சவன் ; பாப்பா கொடுத்துவச்சது , கீ பெத்த - பொண்ணுச்சே ?...ஐப்பசியிலேயே கல்யா ணத்தை முடிச்சிட வேண்டியதுதான் : -

X - - X

இரவு கண் வளர்ந்தது. ஆகவே, ஊரும் உலக மும் கண் வளர்ந்ததில் தவறில்லைதானே ? -

ஆல்ை ஒரு திருத்தம் மேற் குறித்த தகவலுக்கு

ஆதார பூர்வமான விதிவிலக்கு ஒன்று உண்டு. அது,