125
திராடனம் போயிருந்த போது சமயம் பார்த்து, எனக்கு
வரவேண்டிய டாக்கி-நிலுவைப் பனத்தை வசூல்
செய்து ஏழாயிரம் ரூபாய் சேர்த்துக் கொண்டு
பம்பாய்க்கு ஓடி விட்டான் அவன். அந்தப் போக்கிரிப் பயலே எங்கெங்கோ தேடினேன்; கிடைத்திருக்கும்
பட்சத்தில் அன்றைக்கே சிறையில் தள்ளியிருப்பேன்.
எப்படியோ இன்று தினம் அவன் விஷயம் எனக்குக்
கிடைத்திருக்கிறது. இப்படிப் பட்ட துர்ப் புத்தியுள்ள
அயோக்கியன் உங்களுடைய மாப்பிள்ளையாக வரு
வதைத் தடுக்கவும், உங்களுடைய அருமைப் புதல்வி
யின் வாழ்க்கையை ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப் பாற்றவுமே எண்ணித்தான் இதை எழுதுகிறேன்.
எல்லாம் ஆறுமுகப் பெருமான் செயல்.
அ. மு. வே. கனவேலு.”
கடிதத்தைப் பூர்த்தி செய்து கையொப்பம் செய்த
போது, சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு தடவை ஒலி
கிளப்பி ஓய்ந்தது. காய்கள் ஜாக்கிரதை’ என்ற
அபாய அறிவிப்புப் பலகையைச் சுட்டுவதைப் போல
இராஜபாளையம் காய் குரைத்த சத்தம் அவரது செவி களில் எதிரொலித்தது. கொட்டாவி வந்தது; துாங் கினர். விடிந்ததும் எழுதப்பட்ட தாள்களை உறையி
லிட்டு ஒட்டி அதைத் தபாலில் சேர்க்குமாறு கடைக்
குட்டிப் பையனிடம் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு
கடைக்குச் சென்றார் செட்டியார். தான் இயற்ற வேண்டிய பணி ஒன்றினைச் செம்மையுற செய்துவிட்ட தாக ஒர் உள்ள கிறைவு பூத்தது. மணிவாசகா ... வயிற்றையும் வாயையும் கட்டி பைசா-பைசாவாகச்
சம்பாதித்த என் பணத்திலே ஐயாயிரத்தை திருடிக் கிட்டு ஒடினே. உப்பிட்டவனுக்கே மனசார துரோகம் செஞ்ச பாவி நீ உனக்கு விடிமோட்சம் ஏற்பட