126
முடியுமா ? இனிமே நீ எப்படி வாழப் போறே ?...ஒரு பக்கம் கடுதாசி எழுதி இரண்டாம் தடவையும் என்னே ஏமாத்திடலாம்னு யோசிச்சியா?...” -
கண்களின் ரத்தச் சிவப்பை விடிபொழுதுச் சூரிய னுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்ட கிம்மதி யுடன் மெத்தையைச் சரணடைந்தார் செட்டியார்.
X
உதய சூரியனின் பூபாள ராகம் காற்றில் பரந்து படர்ந்து கொண்டிருந்த இனிய வேளையில், மலர்ந்த பூக்களைக் கொய்து எடுப்பதில் பாப்பாவுக்கு ஓர் ஈடு பாடு உண்டு.
அப்போது, வெளி வாசற் கதவு திறக்கப்பெற்ற அரவம் கேட்டு, அரவத்தினைக் கண்டாற் போன்ற பாவனையில் திகைப்பைக் கண் இ2ணயில் ஏந்திகின்றாள் பாப்பா. அரவம் வந்ததா? அல்ல - மணிவாசகன் கின்றான், மாப்பிள்ளை போல-அல்ல, அசல் மாப்பிள்ளையாகவே கின்றான் !
தன்னுணர்வு மீண்டதும், வாங்க அண்ணு ’ என்று சொன்னுள் பாப்பா.
ஐயா, இருக்காங்களா ?” .. “g இப்படி உட்காருங்க. அப்பா கிட்டே போய்ச் சொல்லி விட்டு வாரேன். அப்புறம் நீங்க போகலாம். இருங்க, முதலிலே உங்களுக்குக் காப்பி கொண்டாரேன் ! என்று கூறிக் கொண்டே விசுக் கென்று உள்ளே மறைந்தாள் பாப்பா.
- காப்பியா ?-மணிவாசகனுக்கு மேனி நடுங்கிற் : மெய் சிலிர்த்தது. குன்றிப்போய் அமர்ந்திருந்தான்.