137. - ‘தம்பி.:
சேது திரும்பின்ை. “இன்னிக்கு ராத்திரி சாப்பாட்டு மெனு என்ன வாம்.. ?: . .
வத்தல் குழம்பு; அப்பளமும் குடமிளகாயும் வறுத்திருக்குது ; மத்தியானத்து அரைக்கீரைக் கூட்டு. சமையல்காரப் பாட்டி சொன்னங்க...!” -
சேது, அப்பா இருக்காங்களா ?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் கோதண்டம்; ராமசாமி
யின் நண்பர் பட்டியலில் ஒருவர்.
‘வாருங்கள், வாருங்கள். ஏது வெகு காளைக்கப் புறம் இன்றைக்குத்தான் இந்தப் பக்கம் தலையைக் காட்டுறிங்க...? என்று பையஇனக்கூடக் கவனிக் காமல் அக்கறையாகப் பேச்சை ஆரம்பித்தார் ராமசாமி.
“ஆமாம், காலம் அறிந்துதானே வரவேணும்: ராமசாமி?...வெறுமனே எதுக்காக அலையனும்? சவுக் கியம் எப்படியிருக்குது?...பையன் சேது கொஞ்சம் இளச்சிருக்கான் போலிருக்குதே என் கண்ணுக்கு...?
“இளக்காமல் எப்படி இருப்பான், கோதண்டம் ? அவன் எதிரில் பேசக்கூடாது. தாயைப் பறிகொடுத்த மனக்கவலை இருக்குமே ?...”
அதுதான் சரியான சமயம் என்று சிந்தித்தார் கோதண்டம். இவ்வளவு ஆதரவாகக் கோதண்டத் தோடு என்றைக்குமே ராமசாமி பேசினது கிடையாது. இந்தச் சந்தர்ப்பத்தை எப்படியும் நழுவ விடாமல் பேசி விடவேண்டும் என்ற தீர்மானத்தோடு, அதுதான் நானும் சொல்கிறேன், ராமசாமி பையனுக்கும் மனக் கவலை திரும்; உங்களுக்கும் இந்த நல்ல வயசில்