உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

ஷம் ஒடியே போய்விட்டது. இப்போது இவன்-இந்தப் பத்து வயசுப் பயல், அம்மா-புது அம்மா வேணு மென்று பேசுகிருனே ? ஒரு வேளை விபரம் புரிந்த கிண்டலோ.........? இல்லை, உண்மையே தானு...... ம்...! என்று மனம் குழம்பினர்.

சேதுவின் முகத்தில் கல்மிஷமோ, களங்கமோ தெரியவில்லை. பால் சொல்லிச் சொல்லி வழிந்தது. எல்லாக் கல்மிஷமும் களங்கமும் அப்பா ராமசாமியின் கண்களிலேதான். சேதுவின் முகத்தில் மகிழ்ச்சி கொப்புளிக்க, ரமணியோடு கட்டிப் புரண்டு வாழை மரத் தடியில் குதித்துக் கொம்மாளமிட்டுக் கொண்டிருந்தது இனிய காட்சியாக இருந்தது. - -

கண்களைத் துடைத்துக்கொண்டு, எதிரே இருந்த தன் முதல் மனை விளக்கான லகூடிமியின் படத்தைப் பார்வை யிட்டார் ராமசாமி. நீ சொன்ன பிரகாரம் நான் என் மன ஆசைக்காகக் கல்யாணம் பண்ண் வில்லை; உன் மகன்தான் ஏதேதோ கேட்கிருன்ே கச்சரிக்கிருன். வீட்டுக்கு புது அம்மா வேண்டுமாம் அவனுக்கு !.........நான் திருமணம் செய்து கொள்ளட் டுமா, லகூடிமி...? என்று மனத்திற்குள் வார்த்தைகளை வரம்பு கட்டி, மேற் பரப்பில் கண்ணிரையும் மிதக்க விட்ட வண்ணம் வேண்டினர்.

பிரகதீஸ்வரர் கோவிலினின்றும் உச்சிக் கால்ப் பூசைக்குரிய கண்டா மணி ஒலித்தது. -

எதிர்பாராமலேயே நல்ல சகுனம்தான் இது பேச்சும் வந்தது, மணியும் அடிக்கிறதே! ஒருவேளை ஆண்டவனின் திருவுள்ளமும் அப்படித்தான் இருக்கு மோ!...” என்று நெஞ்சத்தில் இனம் பிரிக்க முடியாத படபடப்பும் சலனமும் பட்டுவிட்டது. அவருக்கு