143
ராமசாமி கண்ணைக் கொட்டாமல் பார்த்தார். அழகும் யெளவனமும் போட்டி போட்டுக்கொண்டு நின்றாள் அந்த அழகு ரம்பை விமலா, மனம் சலனம் கண்டுவிட்டால், அதற்கேற்பத்தான் தொடர்ந்து சம்பவங்களும் நிகழும் போலும் 1. அர்ச்சனை முடியும் வரையில் அந்தப் பெண்ணின் மனமும் நிலை கொள்ளா மல்தான் தவித்திருக்க வேண்டும் ! -
ஈஸ்வரா, உன் சித்தம்...!”
உலகத்திலே இந்த அதிசயங்கள் ஏற்படவில்லை யென்றால், உலகம் அஸ்தமித்துவிடுமோ.....?
கோதண்டம் மனம் வைத்தால் நடக்காதது - ஒன்றுமே இருக்காது; முடியாது. -
மனம் கவர்ந்த பெண்ணே மனையாட்டியாக வாய்க் கவும் வாய்த்துவிட்டாள், ராமசாமிக்கு. ஆடம்பரம் இல்லாமல் கடந்தது கல்யாணம். ஆலுைம், அமைதி யும், ஆனந்தமும் ததும்பிக் கொண்டிருந்தன.
சேதுப் பயலுக்கு வாயெல்லாம் புன்னகை வெள். ளம், போங்களேன். அவனுடைய அர்த்தமற்ற ஆனக் தத்திலே பூரித்துப் போனுர் ராமசாமி. விமலாவுக்கும் ஆச்சரியமும் அன்பும் பொங்கின. இப்படி ஒர் அபூர்வமான, அன்பான பிள்ளே இருக்குமோ என்று அவளேயும் அறியாமல் பாசம் சுரந்தது, மகன்மேல். கட்டியனைத்து, என் கண்ணு, நீ ராஜாடா!...”என்று ஆனந்தம் உலா பாட, அன்புடன் அவள் கொஞ்சியது. சேதுவுக்கே என்னமோ போலத்தான் இருந்தது, -