உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

ஆனந்த நடராஜர் கோயிலில் இரவுப் பூஜை நடந்து முடிந்தது என்பதை அவர் உணரலாஞர். மூன்று நாட்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டிருக்கும் அந்தப் பயம் மண்டின வேளையை-அந்த வே8ள உள்ளடக்கிக் கொண்டிருந்த குடும்ப கெளரவத்தை-அந்தக் கெளர வத்தின் பிற்புலமாக இருந்து நிலவிய தம் கடமையை எண்ணிப்பார்த்து கண்ணிர் சொரிந்தார் தேவர்.

என் கெளரவத்தை நிலை நாட்டுவதற்குக் குறைக் தது முந்நூறு நானூறு ரூபாயாவது கைவசம் வேணு. மே!...இவ்வளவு மோசமான கிலைமையிலே இருக்கிற எனக்கு எப்படி அவ்வள்வு பெரிய தொகை கிடைக்கும்? தெய்வமே ! -

X - X x

மாங்குடியில் அம்பலக் கூத்தன் ஆலயம் புகழ் கொண்டது. சித்திரா பெளர்ணமியன்று கோயில் திருநாள் ஆரம்பமாகும். காப்புக் கட்டு விழாவிலிருந்து வெள்ளி ரத ஊர்வலம் வரைக்கும் ஊர் திமிலோகப் படும். அண்டை அயலில் இருக்கக் கூடிய உறவு முறையினர் அங்கேதான் பத்து நாட்களுக்கும் விருந் தாளிகளாக வந்திருப்பார்கள். இத்தகைய சீரும் சிறப்பும் உள்ளடங்கப் பெற்ற அந்தக் கோயிலில் மற்றுமோர் அதிசயமும் ஆண்டுதோறும் நிகழ்வது உண்டு. அந்த ஆலயத்தின் மூலக் கடவுள் ஆனந்த கடராஜர். சித்திரா பெளர்ணமியன்று விழாவில் அவருக்கென்று நிர்ம்ாணிக்கப் பெற்றிருக்கும் வழக்க ன் வெள்ளியம்பலக் கூத்தரங்குக்குக் கீழே தனியாக ஓர் உற்சவக் கடவுளின் உருவம் உருவர்க்கப்படும். அதற்கு நாளுக்கு ஒரு வேடம் புனைந்து, விழா நடத்தப் படும். ஊரின் தலைக்கட்டுக்காரர்களுக்குள்ளாக வழி