உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153.

சித்திரா பெளர்ணமியை எண்ணிக் கணக்கிட்டுத் தெரிந்த இடத்தில் ஐம்பது ரூபாய் கடனுக்கு வகை செய்து வைத்தார் வேலாயுதம். மண்டபப் படி யன்றைக்கு அர்ச்சனை, சுண்டல் விநியோகம் போன்ற வற்றுக்குப் பணம் வேண்டுமல்லவா ?

ஐம்பது ரூபாய் காளைக்குக் கையிலே கிடைக்கும் ; அதை வைத்துக்கொண்டு மண்டபப் படியைக் கவனிக்கலாமென்று தைரியமாயிருந்தேன். அதற் குள்ளே பெரிய இடி விழுந்து விட்டதே! பெருமானுக்கு வேல் செய்து வைக்கிறதற்கு இப்போது எனகுே வக்கு இல்லையே! தெய்வமே, நான் மனசறிந்து யாருக்கும் எந்தத் தீவினையும் செய்தது கிடையாதே ! பின்னே, ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய் அப்பனே ?...

3:

காப்புக்கட்டு அறிமுகம் செய்துவைத்த திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

தெய்வத்தின் திருச்சங்கிதானத்தில் நின்று வணங் கினர் வேலாயுதத் தேவர். தம்முடைய திருகாள் விசேடத்துக்கென்று தயாரித்திருந்த பணம் அவரது மடியில் அடங்கியிருந்தது. தொழுது திரும்பும் தருணம், கோயிற் பூசாரி வந்து, களவு போன வெள்ளி வேலுக்குப் பதிலாக வேறு வேல் செய்தாகிவிட்டதா என்று விசாரித்தார், கட்டாயம் அதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன், பூசாரி ஐயா!’ என்று தாழ்.குரலில் விவரித்தார் தேவர். விடைபெற்றுத் திரும்பினர். கோயிலின் பிற்பகுதிச் சுவர் கன்னம் வைக்கப்பட்ட கோலம் தெரிந்தது. தாம் புதிய வேல் செய்து வைக்கா விடில், வெள்ளைச்சாமிக்கு இரண்டாம் நாள் திருநாள்