167
அப்பான்னு அவன் வாயாலே சொல்லிக் கூப்பிட்டுக்
கேட்கிறதுக்கு எம் மனசு துடிக்குது, அஞ்சுகம்!”
ஞானப் பிரகாசத்துக்கு பூதலத்தின் நினைவே இல்லை. அப்பா !”-தோன்றிய எண்ணம் உள்ளே ஒட்டியது. . -
கையை விடுவித்துக் கொண்டு எழுந்த அஞ்சுகம், ‘தம்பி பிரகாசம் ! உங்க அப்பாவைத் தேடிக்கினு இருந்தியே, இக்தா வந்திருச்காங்க! என்று விளக் கிள்ை.
‘ஞானப்பிரகாசம்!”
அன்பு மழை பொழிய அழைத்தான் அந்த ஆள். எழுந்து விரைந்து வந்து சிறுவனே வாரியனைத்தான் ; கன்னத்தில் முத்தம் பதிக்க முனைகையில், ஐயோ !” என்ற ஒலம் சிலிர்த்தது.
எடுத்த கல்லை வீசினன் ஞானப்பிரகாசம், பணி முடிந்தது போலும் ! -
புதிய மனிதனின் நெற்றிப் பொட்டில் ரத்தம் பீறிட்டது. - -
அகல் விளக்குச் சுடர் தெறித்தது. - ‘இந்த ஆள் என் அப்பன். இல்லே! யாரோ களவாணி.!. . . . அக்கரைச் சீமைக்குப் போயிருக்கிற எங்க அப்பா இப்பிடியா இருப்பாரு?...ஊஹாம், இவன் என் அப்பன் இல்லவே இல்லே திருடன் ! என்று ஞானப்பிரகாசம் அலறின்ை. - -
‘திருடன் 1 களவாணி!-அஞ்சுகத்தின் இருதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. பணம் திருட்டு போன விஷயமா ஒரு கேஸிலே அகப்பட்டு, இத்தனை வருசமும் சிறையிலே வாடி வதங்கித் திரும்பியிருக்கிற