169
காணுேம் வெளியே விரைந்தாள். அவன் கண்ணிர் சொரிந்து கின்று கொண்டிருந்தான்; அஞ்சுகம், ஞானப்பிரகாசம் என்னே அப்பான்னு ஒப்புக்கொள்ளாம இருக்கையிலே, கான் இனி உன்னுேட இருக்கிறது சிலாக்கியமில்லை. கான் திரும்பிவர ஏலாத இடத் துக்கே போயிடுறேன்!” என்று உருகினன்.
தெரு விளக்கு அழுது வடிந்தது ! அவனது கைகளைப் பரபரவென்று - இழுத்துக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தாள் அஞ்சுகம்.
கை கூப்பித் தெய்வம் தொழுத ஞானப்பிரகாசம் கரித்துண்டையும் சாக்குக் கட்டியையும் எடுத்துக்
கிறுக்கினன், சித்தன் போக்கு சிவன் போக்கு
‘ஞானப்பிரகாசம், என்னே கம்புடா கண்ணு.1 இவருதான் உன் அப்பா!...செஞ்ச தப்புக்குத் தண்டனை அனுபவிச்சு இவ்வளவுகாலம் கழிச்சு மனசு திருந்தி வந்திருக்கிற இவரு உன் அப்பா தான் !”
ஞானப்பிரகாசம் நிமிர்ந்து அன்னையை நோக்கினன்; பிறகு, அந்தப் புது மனிதனையும் பார்வையிட்டான். தாடி, மீசையுடன் கடற்கரையில் மயங்கிக் கிடந்த அவனுக்குத் தான் சோடா வாங்கிக் கொடுத்த சம்பவ மும் அப்பொழுது அவன் இளம் மனத்தில் பளிச் சிட்டது. கடைசியாக, தரையில் முழுமை பெற்றிருந்த உருவத்தையும் கண்டான்.
அஞ்சுகத்தின் கணவன், தன் உருவத்தைச் சித்திரத்தில் கண்டு ஆனந்தம் கொண்டாடினனே!
“அப்பா...அப்பா!...”