17] வேண்டுமென்றுதான் அவ்விளம்பரம் அவ்வாறு செக்தி நிறம் உமிழத் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனல் அவ்வழியே சென்றவர்களுக்கு அந்த அட்டைஉண்மை யிலேயே ஓர் அபாய அறிவிப்பாகியிருக்குமோ, என்னவோ? இல்லையென்றால், சிமெண்டு பூசப்பட்ட அந்த கடைபாதையின் மையப் பகுதியின் கீழ்த்திசை ஒரத்தில் விரிக்கப் பெற்றிருந்த சேலேக் கிழிசல் துணி அப்படிச்சோக பிம்பமெனக் காட்சியளித்துக்கொண் டிருக்குமா ? உதயதுரியனைத் தரிசித்த அக்கிழிசல் இதோ, கதிரவனின் விடை பெறுங் காட்சியைக் கூடக் காணப் போகின்றதே ஆணுல், அந்தக் கந்தைக்குக் கிடைத்த தர்மம் எவ்வளவு தெரியுமா ? ஐம்பத்து நாலு காசுகள்-புதுக்காசுகள் உஸ், இரையாதீர்கள்!. இந்தச் சில்லறையில் தான் அத்தனே இதயங்களும் அடங்கவேண்டுமா ? ஈஸ்வரா ...ஒருவேளை, இந்தச் சில்லறையில்தான் உலகமே மொத்தமாக அடங்கி விட்டதோ ? கற்பனை வளம் மிக்க விந்தைமிகு இலக்கிய மனத்திலே ஊற்றெனப் பாய்ந்தோடும் எண்ண வெள்ளம் போலத்தான் மனித மங்தை நெளிந்து கொண்டிருந்தது. இருந்தும், என்ன புண்ணியம் ? புண்ணியமாவது, பாவமாவது ? மேற்கத்திய நாகரிகம் கடல் கடந்து வந்து, கூவம் நதிக் கரையிலே கல்ல வேளேயாக இறங்கித் தொலைச் ாமல், ! சைனுபஜாரில் பாதம் பதித்தது; அக்காக - தண்டனிட்டுக்கிடப்பதற்கே அவ்ர்களுக்கு நேரம் காலம் போதவில்லை என்கிறார்கள்ாமே? ஆம்; அதோ பாருங்கள், ஜோடி சேர்ந்து, ஜோடி பிரிந்து செல்கிறார், கள் ஒரு சாரர். குளிர்பானம் குடித்தது போதாதென்று கடற்காற்றையும் குடித்துத் திரும்புகிறது பிறிதொரு கூட்டம். விடுதலை அடைந்த மண்ணிடை அடிமைக் கதையை நினைவூட்டுவது போல இதோ மற்றெரு
பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/173
தோற்றம்