175
சுரந்தது. அரை வயிற்றுக்கஞ்சிக்கே லாட்டரி அடிக்கும் நிலையிலே பாலாவது, மண்ணுவது ? அப்பன் காரன் குருதியை வேர்வையாக்கினுன் : அந்த வேர்வை யில்தான் மானிக்கம் வளர்ந்தானே ? - ... ?
காலம் ஓடியது ; அந்த ஓட்டத்தில் தடம் பதித்துக் காட்டிய இயற்கையின் விளையாட்டில் மாணிக்கத்திற்குத் தம்பியும் தங்கைகளுமாக அறுவர் கிடைத்தனர். விளையாட்டுக்குத் துணைவேண்டாமா ? ஆணுல், விதியின் விளையாட்டிற்குத் துணைபோய் விட்டான் அவளுடைய அவன்! கடைசிக் குழந்தை, பெண் ; லசஷ்மி என்று பெரிட்டார்கள். ஒருநாள், குழந்தைக்குப் பால் பற்றவில்லை ; பாயும் படுக்கையு மான தந்தை, குடும்ப சகிதமாக அனுபவித்த பசிக் கொடுமையைக் கண் கொண்டு பார்த்து, கெஞ்சுக்குள் ளேயே கெக்குருகினன். வெளியிலே போயி கொஞ் சூண்டு பசும்பால் வாங்கியாரேன், அன்னம் ‘ என்று சொல்லிச் சென்றவன், பசும் பாலையா கொணர்ந்தான் f அன்று. அவனுடைய வெறுங் கட்டையை'த்தான் யாரோ கொணர்ந்தார்கள் ! - பூவும் மஞ்சளும் குங்குமமும் அவளைக் கண்டு, கண் தெரியாத இடத்துக்கு ஓடி ஒளிந்து கொண்டன :
X X
நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, இராமநாதபுரம் மாவட்டம் மானம் பார்த்த சீமை என்பது! மானம் : வானம். ... • * . . . . . . . . . பிறந்த மண்ணைத் துறந்தாள் அவள். சனிப் - பெயர்ச்சிக்குப் பேர் பெற்ற புண்ணியஸ்தலம் தேவி.