உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$76

பட்டினம். ஆல்ை, அவளுக்கு மட்டும் அவ்வூர் விலக்கு

விதி போலும்! பிள்ளே வரம் வேண்டிச் செல்பவர்கள்

முதலில் தேவிப்பட்டினத்தில் ‘ஸ்நானம் செய்துதான்

தங்கள் பயணத்தைத் தொடர வேண்டும். அதன்

காரணமாகத்தான், அவளுக்குப் பிள்ளைச் செல்வங்கள்

நிரம்பி வக்தனவோ? இவ்விதிக்குள் அவள் விதி :

உடன்பாடானது பிறந்த மண் சீதனம் தந்த குழந்தை

கள் ஏழையும், எண்ணிக்கைக்கு இடம் தர ஒப்பாத கல்

குரவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அவள்

வழி நடந்தாள் ; விதி வழியே நடைதொடரலாள்ை.

கட்டின பொஞ்சாதியையும் புள்ளைகுட்டிகளையும் காப்

பாத்த ஏலாம அவுரு மட்டும் தப்பிச்சிக்கிட்டாரு!'என்ற

கினேவை, அவளுடைய பூங்கரம் பற்றியவனது இதழ் முனைகளில் ஒட்டிக்கிடந்த விஷப் பச்சிலைத் துணுக்கு

கள் அவளுக்கு எடுத்துக்காட்டிய வண்ணம் இருந்தன.

அந்த நினைவினுடே, அவளுக்குப் பட்டணம் வழி

காட்டிற்று. அதுவேதான் விதியின் வழியெனவும்

அவள் கிர்ணயம் செய்தாள். ஜனநாயக அரசாங்கம்

என்ற உரிமையில் அவளும் குழந்தை குஞ்சுகளும்

ரெயில் வண்டியில் ஏறப்போய், ஊர்பேர் புரியாத

பொட்டைக் காட்டு நிலையம் ஒன்றில் இறக்கிவிடப்

பட்டு, இம்மாதிரியான கூத்துக்களில் துணைகொண்டு, ஒரு வழியாக அவள் சென்னப்பட்டணம் வந்து சேர்க் தது அவளுக்குச் சொப்பனமாகவே பட்டது. கெட்டும் பட்டணம் சேர்’ என்ற வாசகம் அவளுக்கும் மனப் பாடம் ஆகியிருக்கத்தான் வேண்டும்! -

சவலைக் குழந்தையை இடுப்பில் வைத்து அணைத் துக்கொண்டு, மற்றப் பிள்ளைகுட்டிகளை என்.ஸி.ஸி. அணிவகுப்புப்போல அமைத்தவாறு அழைத்துக் கொண்டு அவள் பட்டணத்தை வலம் வந்தாள்.