உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

ஆள், காதிடுக்கில் இருந்த பாதி பாவட்டா பீடி'யைப் பற்றவைத்துக் கொண்டு வழி கடந்தான்.

சாம்பான் குடிசைக்குள் அடிமிதித்தான். மாட்டுக் காலில் மிதிபடும் போரடித் தளைகளையொப்ப, எண்ணங் களே மிதித்தான். எண்ணங்கள் அவனே மிதித்தன. கைகளே விழிப்பரப்பில் ஊரவிட்டான். பிஞ்சுச் சவுக் கின் கூரிய இலைகளென முகம் பூராவும் மீசையும் தாடியும் மண்டியிருக்கக் கண்டான். செட்டித்தெருவில் ‘சிவ பதவி அடைந்த செட்டியாரை எண்ணின்ை. செய்த தான தருமத்தை எண்ணம் ஞாபக மூட்டியது. “தீ மூட்டத்திலே வேகப்போகுது செட்டியாரோட மேனி. சோத்தாங்கை தாரது பீச்சாங்கைக்குக்கூடத் தெரியாம குடுத்துக் கிட்டிருந்த மவராசரு அவரு. மேலோகம் போயிட்டாரு. இந்தப் பாளத்த கட்.ை க்கு அந்த ஐயா ஊத்தின கஞ்சி ஒரு மட்டையா, ரெண்டு மட்டையா?...என்னமோ, இதுவுந்தான் நாளைக்கோ இன்னக்கோ சுடுகாட்டிலெ தெக்குப்பக்கம் மண்டை யை வச்சுப்படுக்கப்போவுது!...அதுக்குள்ள அது... எம்புட்டு ஆசை கெலிப்புக்காட்டிப்புடுமா?...அல்லாம் சங்கிலிக் கறுப்பண்ணசாமி தொனேதானுக்கும்...!

ஓர் எட்டு எடுத்துவைத்தான் சாம்பன். ஆத்தா. . . பொன்னியோ!...ஆ..த்...!

நிறைபெருக்குக் காட்டித் தவழும் பொன்னியாகத் தலைவைத்துப்படுத்திருந்தவள்விசுக்கென்று விரைந்து எழுந்தாள். உயிருக்கு மன்றாடிய ஈச்சம்பாய்க் கிழிசல் ஒதுங்கியது. ஒதுங்கிக்கிடந்த மாராப்புச் சேலையை ஒதுக்கியவாறு, கண்களைத் துடைத்துவிட்டாள் ; பிறகு கிமிர்ந்தாள். அப்பனுங்காட்டி அளேச்சது:” என்றாள்.