உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

வாயில் விரல்வைத்து வழங்கிய முடிவைக் கேட்ட சேரி, மூக்கில் விரல் வைத்தது!

கிழவன் சாம்பான் அட்டி பேசவில்லை. அவனுக்குத் தன் அருமந்தப் புதல்வியின் சொல்தான் வேதவாக்கு.

“அப்பாரே, நீ ஏதொண்ணுக்கும் கிலேசம் காட் டாதே ! சாமி காட்டியிருக்கிற வழி இதாக்கும். சேடை கட்டி, சேட்டை பேசி வெளையாட்டுக் காட்டுற புள்ளேங்க அல்லாரும் சோடைங்க : இந்த சேந்தங்குடி மச்சாக்தான் அசல் புள்ளி. பசையில்லாப் போனு, என்னவாம் ? நாளேக்குக் காசு வாராதா ? ஒரு தில்லு முல்லு, குடிகிடி இல்லேயாம். மாசத்திலே அஞ்சு எடத் துக்கு ஊளியம் பார்த்தாக்கூட, கம்ம பஞ்சம் பஞ்சா யிடுமே?...ஆத்தாளை கண்ணுமாரிதி பார்த்துக்கிட்டு வார இந்த மச்சாந்தான் என்னேயும் உசிராட்டம் காத் துக்கிடுவாரு கம்ம சின்ன எசமானரு இல்ல, அவுககூட இந்த ஆம்புளையைப் பத்திரெண்டு கடுத்தம் சிலாகிச்சு ஒசத்திப் பேசினங்களே !...”

சொப்பனப் பாவையாய் உருக்கொண்டு கின்றாள் பொன்னி, சம்பந்தம் பேசி, பரிசம் முடிந்தபின் ஒரு முறை, அவள் புல்கட்டைச் சுமந்து சென்ற போழ் திலே, புள்ளே!’ என்று குர்ல் கொடுத்து, வலுவில் வந்து முதலில் பேச்சுக் கொடுத்தானே சின்னன், அந் நிகழ்ச்சியில் சொப்பனம் கண்டு மெய்ம் மறந்தாளா?

“அண்ணியோ !” என்று விளித்தாள் காத்தனுர்க் GT. ...:

பொன்னின் எழில் மின்ன, பொன்னி நகை சிந்த, அன்ன கடை ஏற்றி, வண்ணக் கலாப உரு போற்றி கடந்தாள் பொன்னி.

வி:-13