202
“இந்தாலே! என்ன இதுக?” “மொதலாளி தந்தாங்க :
“மொதல்லே இதுகளே அவுககிட்டவே குடுத்துப் புடு, மூச்சுக்காட்டாம, காஞ் சொல்ருப்புலே நட புள்ளேங்கிறேன்...’ - - -
- மச்சான் ::
“அதெல்லாம் அப்பாலே ‘
சச்சிதானம் பொறி கலங்கிப் போனன். இந்தப். பாரு, சின்னன்! ...”
சின்னன் திரும்பினுன், எசமான்!...” என்று கூப்பிட்டு, தலைமுண்டாசைப் பிரித்து, அதிலிருந்து பொன்னியின் புகைப்படம் வெளியாகியிருந்த காகி தத்தை எடுத்து நீட்டியவாறே, மொதலாளி, நீங்க பொன்னியை ஏதுக்குப் படம் புடிச்சீங்க?...புடிச்சதுசரி; அதை ஏதுக்கு அச்சிலே வரச் சொன்னிங்க ?...ஒங்க தங்க மனசு எனக்கு அத்துபடிதாங்க. ஆளுக்க, நீங்க இதுவோட சகசமாப் பேசிப் புளங்கிறதையும், இந்தப் படத்தையும் வச்சிக்கினு எஞ்சேக்காளிப் பயலுவ கண்டவாக்கிலே பேசருனுங்க!...நீங்க பெரிய மனசு வச்சு, இதுகளை திருப்பி வாங்கிக்கிடுங்க 1...தாலிகட்டி, மஞ்சளும் சந்தனமும் இன்னம் காயக்கூட இல்லே ! அதுக்குள்ளாற பூசலை உண்டாக்கிப்புடாதீங்க, சாமி!”
சின்னன் விம்மினன்!
சச்சிதானந்தம் அதிர்ந்து நின்றன். நெஞ்சம் விம்மியது; உந்திக்கமலம் அழுதது. அவன் பார்வை, உள்ளங்கைப் படத்தில் நிலைத்தது. இந்தப் படம், அபிஷேகம் செய்யப்பட்ட அம்பிகையையே சதா எனக்கு நினைவுறுத்தி வருகிறதென்ற உண்மையை