இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'பெண்ணிற் பெருந்தக்க-யாவுள’ கன்னியா குறிச்சி மஞ்சள் பூசப்பட்ட வாலக் குமரியின் அழகிய வதனம்போல, செங்கதிர்வான வனின் உதயத்திலே, அந்தம் கிறைந்த வண்ணமும், இதய்த்தை நிறைக்கும் வனப்பும் ஏற்றம் புரிந்தன.
காலை வேளை மூன்றரை நாழிகைப் பொழுது. குத்து மதிப்பான கால அள்வு. - பூவத்தக் குடிக்கு வடக்கு எல்லேக் கோடாக அடை யாளம் காட்டிக் கொண்டிருந்த அந்த நீள் பெருவெளி யிலே அமைந்திருந்தது, காத்தான் துண்டு எண்பது குழி த்தாக்கு. கருவேல் முள் வேலியின் உட்புறத்ேத வேர்க்கடலைக் கொடிகள் பசுமை காட்டிப்படர்ந்திருந் தன். அவற்றின் உள்ளங்களே மண் முடியிருந்தது.
கூண்டு வண்டியின் நுகத்தடியின் ஒரத்தில் வைக் கப்பட்டிருந்த தண்ணிர்ப்பானயை இடது கையில்ை