இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2}{}
- தமிழரசி 1.
ஒ...ஆறுமுகமா ?.
- பொய் !...
- என்ன சொல்றே நீ ?...”
- ஒரு முகத்தை வச்சுக்கிட்டு, ஆறுமுகம்னு டுப் அடிக்கிறியே நீ ... -
நான் சிரித்தேன். அவள் தந்த ஆணிமுத்துச் சிரிப்பு அது !
- தமிழரசி !...”
- என்னவாம்?...”.
அவளுக்கு பிகு கூடுதல். இன்றல்ல ; என்றுமே தான். அவள் சுபாவம் அப்படி அவரவர் விதிக்கு விதிக்கப்பட்ட போக்கு போக்கின் விதி அது !
இதோ, அண்டி வந்துவிட்டாள் !
என்னைப்போல, உங்களுக்கும் தங்கைமார்கள் இருப்பார்கள் : பாருங்கள்.
மல்லிகைப்பூவின் வடிவம் அவள் மேனி.
கோல விழிகளில் கோலக் கலாபமயிலின் கருவம்.
உதட்டுக்கரைதனிலே முல்லையின் நல்ல புனிதம்.
எடுப்பான காசி. இருபக்கத் துவாரங்களும் அந்த முடன் அமைந்து, துணியில் கூர்மை தெளிந்து கிற்கும் பாவம் , - . -
- பால்வாய்ப் பசுந்தமிழின் இனிமை, அவள் பெயரில்!
தமிழரசி *...