20
தாங்கிப் பற்றிய வண்ணம் பானையின் வாயருகில் வலது கை உள்ளங் கையைக் குவித்துத் தண்ணிர் பருகினன் சாத்தப்பன். அரும்பரும்பாக வேர்வை மண்ணில் தெறித்தது; வடிந்த் நீர், உழைப்பின் க2ளப் பைப் போக்க முயன்றது. அலுவல் அழைத்தது. தலை முண்டாசுத் துணியில் முத்துக்கள் ஒளிந்துகொண் டன. நிறை பிரிக்கப்பட்டுப் பூர்த்தி பெற்றிருந்த பகுதிகளைக் கண்னேட்டம் விட்டவாறு கொக்கரை யும் கையுமாகக் குந்தின்ை அவன். .
- ஏலேய் பொடி சு!...அங்கே என்ன . பண்றே ! உக்காந்துக்கிட்டே கோளித் துாக்கம் போடுறியாடா :
எஇல்லீங்களே !
செல்லா, துப்பின எச்சல் காயறதுக்குள்ளாற r கீழ்த் துண்டுக் கடலைக் கொடி அல்லாத்தையும் மட மடன்னு பாக்கியில்லாம அரிச்சுப்புடனும் தெரியு மில்ல!! .
ஆகட்டுங்க! மொதலாளி, ஒரு மடக்குப் பச்சத் தண்ணி குடிச் சுப் புட்டு ஒடியாரேங்க!’
. மருதங்குடி அம்பலகாரரே, வெத்தலைச் சருகை வெரசாப் போட்டு மென்னுகினே கொக்கரையை மட மடன்னு ஒட்டுங்க .
நல்லதுங்க தம்பி.பொட்டுப் பொளுதுக்குள்ளே நாலு கொடங்கை கொடி அரிச்சு வீசிப்புட்டேன். எங் கணக்குக்குச் சொச்சம் மீந்திருக்கிறதை யெல்லாம் அந்திப் பொழுதுக்குள்ளே முடிச்சுப்பிடுவேன்!"