உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2#9

தனித் தன்மை வாய்ந்தது. அவ்வாறுதான், இந்தச் சம்பவம்கூட ஏற்பட்டிருக்கிறது!...

இதோ, கான் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக் கிறேன். அதோ, அமிர்தமும் புறப்பட்டுவிட்டாள்.

ஏன் தெரியுமா?

தமிழரசிக்குத் திருமணம் !

அழைப்பு அனுப்பியிருக்கிருள். அவள் கைப்படக் கடிதமும் எழுதியிருக்கிருள் இப்போதுதான் என் இருப்பிடம் தெரிந்ததாம் . . .

|கினைக்க கினைக்க, கெஞ்சு குதிக்கிறது. எண்ண

எண்ண, மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது. ஆண்ட வன் கல்லவன் !

அப்பப்பா ! எத்தனை ஆண்டுகளின் கனவு இது? கதிர் முத்தச் சிரிப்பில் நகைவிரியும் கமலத்தின் ஒயி லிலே, முதிர் சேர் பலாச்சுளையின் இனிப்பிலே, ஓடும் பூம்புனலின் புது வெள்ளப் பூரிப்பிலே, அன்றாடம் வரும் கடிதங்களின் முகவரியிலே, ஒலிக்கும் தொலை பேசியின் வடிவிலே எல்லாம் அன்புமண்டிய தமிழரசிப் பாவையின் முகத்தைத் தரிசித்து மகிழ்ந்த-தரிசிக்க ஏங்கிய காட்கள் ஒன்றா, இரண்டா ? .

ஈஸ்வரா !

எழும்பூர் வந்தது; பின் தங்கியது.

“தமிழரசிக்குக் கலியாணம்:-உள்ளத்தின் உள்ளே, கட்டிச்சூடனின் இதயத்தில் உறையும் பொற்புக்கு ஏற்ப, ஒர் ஆவல் கிளர்ந்தெழுந்தது. எண்ணினேன். எண்ணத் தவம் இயற்றினேன்; எண்ணிட நோன்பு இருந்தேன். - -