உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

“ஆமாங்க, சேர்வைகாரரே ! உங்க பொண்ணுக் குப் பரிசம் போட்டாச்சாமே?

“மெய்தானுங்க. என் ஒடப்பொறந்தா மகன் சாத்தப்பனுக்கே என் மகளைக் கண்ணுலங் கட்டிக் கொடுக்கப் போறேன்!!!

‘பரிசப் பணம் எம்பிட்டு வச்சிது தம்பி ??

‘நூறு ரூவா !”

“இம்புட்டுத்தானு ?? ‘பனத்துக்காகப் பார்த்திருந்தாக்க, சிலட்டுர் கங்காணி வீட்டிலேயே சம்பந்தம் சாடிக்கையை வச்சுக் கிட்டிருப் பேனுங்களே ...கோரைய்யா, எனக்குக் காசு பணம் ஒசத்தி கிடையாதுங்க! ரத்தக் கலப்பு கைமாறிப் போயிடாம, தலைமுறை தத்துவமா எங்க குடும்பத்துக் குள்ளவே சுத்திக்கிட்டு இருக்கோணு மிங்கிறதுதான் எம்பிட்டு ஆசை!...எங்க பவளத்துக் குப் பசி புரிஞ்சு வேளா வேளைக்குக் கஞ்சித் தண்ணி ஊத்தி அதைப் பக்குவம்ா நடத்தி வரக்கூடிய கெட்டிக் காரத்தனம் கொண்டது எங்க மாப்பிள்ளை. ஆத்தா புண்ணியத்தாலே சாத்தப்பன் கைகாலோட ராசாவட் டம் எடுப்பாவும் இருக்குது. சாத்தப்பனையும் பவளத் தையும் இன்னிக்கு நேத்தைக்கு நான் புருசன்-பொஞ் சாதியாக் காணலேங்க!...எங்க அக்காவுக்குச் சாத் தப்பன் பொறந்த மறு மூளும் வருசம் என் வீட்டுக்காரி பவளத்தைப் பெத்தெடுத்துத் தந்து கண்ணே முடிப் புட்டா உம் !...இதுங்க ரெண்டுக்கும் கண்ணுலம் கட்டிவச்சு முடிச்சுப்புட்டேன்ன, அப்பறந்தான் கான் பாயிலே பூந்து படுத்துத் துரங்க ஏலுமுங்க!’ என்று விளக்கம் தந்தார் சின்னசாமிச் சேர்வை. -