இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீலாம்பரி
எதிர் வீட்டுப் பிரஹதத்தின் வீட்டினின்றும் மிதந்து வந்து கொண்டிருந்த அந்தத் தாலாட்டுப் பாட் டின் இன்ப நாதம் அவள் காதுகளில் ரீங்கார மிட்டுக் கொண்டிருந்தது. மெய்யும் மனமும் ஒன்று சேரவே, அவள் தன்னை மறந்தாள் ; சூழ்நிலையை மறந்தாள் ; உலகத்தையே மறந்துவிட்டாள். அவள் முன் அழகு. உருவம் ஒன்று தன் கனி இதழ்களைத் திறந்து அழகு. காட்டிப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது. அவ் வுருவம் அவள் விழி விளிம்பில் ஆடாத பதுமையாக, பேசாத பொற்சித்திரமாக, புனையாத ஒவியமாக நெளிந். தோடிக் கொண்டிருந்தது. அவள் சிரித்தாள். தன்கை கறந்து சிரித்தாள் ; உலகையே மறந்து சிரித்த சிரிப்பு
அது: . . . . . . . . . . . ;