5
சந்திரா இரண்டாவது முறை கருவுற்றிருந்தாள். இந்தப் பேறு அவளுக்கு இதயம் கிறைந்த கிம்மதியைத் தந்தது. அடைந்த துயர் வடு தழும்புமாறிப் போகு மென்ற ஆறுதலில் நாட்களே, மாதங்களைக் கணக்கிடு வதில் போக்கினர் ரங்கநாதன். காலத்தின் நெருக்குப் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்த இடை நாட்களில் ஒருவர் முகம் ஒருவருக்கு ஆறுதல்; அவர்கன் வாழ் வின் ஆறுதல் அப்படி வாழ்க்கையின் கிர்ணயம் அப்படி ! -
தண்ணிரில் இட்ட சர்க்கரையென, காலம் கரைக் தது. ஆல்ை, சர்க்கரைபட்ட தண்ணிராக விளைவு உருத்தேருதிருக்கையில், இன்பம் ஏது? வாழ்வு ஏது?
தினமும் டாக்டர் கமலம் சந்திராவை பரிசோதித் துச் சென்றாள். கர்ப்பந்தரித்து எட்டு மாதங்களும் தேய்ந்தன. அவளது கரு வளர்ந்து கொண்டு வந்தது. முதல் பிரசவத்தின்போது ஏற்பட்ட குறைப் பிரசவ எல்லை'யும் கழுவி ஓடியது. எல்லைப் பிரிவு அவர்கள் நெஞ்சங்களுக்குள் ஆனந்தம் பிணைத்தது.
இன்பத்தின் தவிப்பை ஏங்க வைத்து நீட்டி முழங்
கிச் சென்றது காலம்.
அன்றும் வழக்கம்போல சந்திராவைப் பரிசோதித் தாள் டாக்டர் கமலம். கடந்த சில நாட்களாக ஆஸ் பத்திரி மெடர்னிட்டி வார்டில் விளைந்த கண்காணிப் பின் பேரில் கர்ப்பநாடி சுமுகமாகவே பேசியது. டாக் டருக்கும் திருப்தி. , , . “ ,”, - “ ”
சந்திரா, இரண்டொரு நாளில் பிரசவமாயிடும். பயப்படாதே. நான் இன்று இரவு திருச்சிபோய், விடிக் ததும் வந்து விடுகிறேன்; என்று சொல்லிச் சென்றாள்
டாக்டர் அம்மா. -